Home நாடு பாம்பினால் அவசரமாகத் தரையிறங்கிய ஏர் ஆசியா விமானம்

பாம்பினால் அவசரமாகத் தரையிறங்கிய ஏர் ஆசியா விமானம்

710
0
SHARE
Ad

கோலாலம்பூர் : ஏர் ஆசியா விமானத்தில் ஒரு பாம்பு இருந்ததால் அந்த விமானம் உடனடியாக தரையிறக்கப்பட்டு, அந்த பாம்பு அகற்றப்பட்டது.

சமூக ஊடகங்களில் பரவிய இந்த செய்தி முதலில் உண்மையில்லை – இட்டுக்கட்டிய ஒன்று – என்றே கருதப்பட்டது. ஆனால் இதன் தொடர்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கும் ஏர் ஆசியா அதிகாரி கேப்டன் லியோங் தியன் லிங்,  பிப்ரவரி 10ஆம் தேதி கோலாலம்பூரிலிருந்து தாவாவ் (சபா) செல்லும் விமானத்தில் இந்த பாம்பு காணப்பட்டது. உடனடியாக அந்த விமானம் கூச்சிங் நோக்கி  செலுத்தப்பட்டது.

விமானத்தை செலுத்திய விமானி விமானத்தில் பாம்பு இருப்பது தெரிந்ததும் உடனடியாக விமானத்தை கூச்சிங் நோக்கி திசை திருப்பும் முடிவை எடுத்தார்.

#TamilSchoolmychoice

இதுபோன்ற சம்பவங்கள் அபூர்வமாக எப்போதாவது நடக்கும் என்றும் ஏர் ஆசியாவின் அந்த அதிகாரி தெரிவித்தார்.

விமானம் தரையிறக்கப்பட்டதும் அந்தப் பாம்பு அகற்றப்பட்டு அதன் பின்னர் விமானம் தாவாவ் நோக்கி செலுத்தப்பட்டது.

அந்தப் பாம்பு எப்படி விமானத்திற்குள் வந்தது என்பது தங்களுக்குத் தெரியவில்லை என்றும் அந்த அதிகாரி தெரிவித்தார். அந்தப் பாம்பு பயணிகள் ஒருவருடையதா என்பதும் உறுதிப்படுத்தப்படவில்லை.