ஏர் ஆசியாவின் தோற்றுநர் டான்ஸ்ரீ டோனி பெர்னாண்டஸ் இந்த உறுதிமொழியை வழங்கியிருக்கிறார்.
“எனினும் இதற்கு சற்று காலம் பிடிக்கும். ஏர் ஆசியா கடந்த ஓராண்டாக பயணங்கள் எதனையும் மேற்கொள்ளவில்லை. எங்களுக்கு மற்ற நாடுகளின் அரசாங்க விமான நிறுவனங்களைப் போன்று நிதி உதவி எதுவும் வழங்கப்படவில்லை. கட்டணங்களைத் திருப்பிச் செலுத்த நாங்கள் உறுதி கூறுகிறோம். பயனர்கள் மெல்ல மெல்ல தாங்கள் செலுத்திய கட்டணங்களை திரும்பப் பெறுவர்” எனவும் டோனி பெர்னாண்டஸ் இன்று வியாழக்கிழமை (ஏப்ரல் 1) தனது முகநூல் பக்கம் வழி தெரிவித்தார்.
ஏற்கனவே 1.5 மில்லியன் பயனர்களின் கட்டணங்கள் திருப்பிச் செலுத்தப்பட்டிருக்கின்றன என்பதையும் டோனி பெர்னாண்டஸ் குறிப்பிட்டார்.
மேலும் 2.9 மில்லியன் பயனர்கள் தங்களின் கட்டணங்களை மறுபயணப் பதிவுகளின் வாயிலாகப் பெறுவதற்கு ஒப்புக் கொண்டுள்ளனர் என்றும் டோனி பெர்னாண்டஸ் தெரிவித்திருக்கிறார்.