Home One Line P1 தேமு தனித்துப் போட்டி குறித்து உச்சமன்றக் கூட்டத்தில் பேசப்படும்

தேமு தனித்துப் போட்டி குறித்து உச்சமன்றக் கூட்டத்தில் பேசப்படும்

857
0
SHARE
Ad

கோலாலம்பூர்: 15- வது பொதுத் தேர்தல் குறித்த தேசிய முன்னணியின் நிலைப்பாடு குறித்து அதன் உச்சமன்றக் குழு கூட்டத்தில் இறுதி செய்யப்படும் என்று மஇகா தலைமைச் செயலாளர் எம்.அசோஜன் தெரிவித்தார்.

தேசிய முன்னணி 15-வது பொதுத் தேர்தலில் தனித்துப் போட்டியிடும் என்று அகமட் சாஹிட் ஹமிடி கூறியது, அம்னோ தலைவராக அவரது தனிப்பட்ட பார்வையைக் கொண்டது என்று அவர் கூறினார்.

“15-வது பொதுத் தேர்தலில் தேசிய முன்னணி தனியாக போட்டியிடுமா என்பது தேசிய முன்னணி உச்சமன்றக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும். அம்னோ பொதுப் பேரவையில், தேசிய முன்னணி தனியாக போட்டியிடும் என்று சாஹிட் கூறியது, ​​அது அம்னோ தலைவராக அவரது தனிப்பட்ட பார்வை என்று நான் நம்புகிறேன். இறுதி முடிவு தேசிய முன்னணி உச்சமன்றக் கூட்டத்தை அடிப்படையாக கொண்டிருக்க வேண்டும்,” என்று அவர் கூறினார்.

#TamilSchoolmychoice

பெர்சாத்துவுடனான உறவைத் துண்டித்துவிடுவார்கள் என்று கூறிய சாஹிட்டின் முடிவில் மஇகா உடன்பட்டது போல தெரியவில்லை என்று மலேசியாகினி குறிப்பிட்டுள்ளது.

நாளை தொடங்கி மஇகாவின் 74- வது பொதுப் பேரவை நடைபெற உள்ளது. மஇகா, பெர்சாத்து மற்றும் தேசிய கூட்டணி அரசாங்கத்துடனான ஒத்துழைப்பு பிரச்சனையைத் தொடும் என்றும் வட்டாரம் தெரிவித்ததாக அது கூறியுள்ளது.

முன்னதாக, பெர்சாத்து கட்சி மஇகா மற்றும் மசீசவை கவர்வதற்கு முயற்சி செய்வதாக அம்னோ இளைஞர் பிரிவு தலைவர் ஒருவர் தெரிவித்திருந்தார்.