இதனிடையே, அவர் அளித்த விளக்கம் திருப்தி அளிக்கவில்லை என்று இந்திய தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழக சட்டமன்றத் தேர்தலில் இரண்டு நாட்களுக்கு பிரச்சாரம் செய்ய ஆ.ராசாவுக்கு இந்திய தலைமை தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. திமுக பேச்சாளர் பட்டியலில் இருந்து ஆ.ராசா பெயரை தேர்தல் ஆணையம் நீக்கியுள்ளது.
பிரச்சாரத்துக்கு தடைவிதிக்கப்பட்டதை எதிர்த்து ஆ.ராசா தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர முறையீடு செய்யப்பட்டது. ஆனால், அவசரமாக விசாரிக்க முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துவிட்டது.
Comments