Home Photo News முரசு அஞ்சல் இயலி – வாங்க பேசலாம்!

முரசு அஞ்சல் இயலி – வாங்க பேசலாம்!

185
0
SHARE
Ad

மூன்று நாடுகளில் முரசு அஞ்சல் வெளியீடு காணவிருப்பது நாம் அறிந்ததே. (கோலாலம்பூரில் முதல்கட்டமாக  எதிர்வரும் வெள்ளிக்கிழமை ஜூன் 27-ஆம் தேதி முரசு அஞ்சலின் புதிய பதிப்பு வெளியீடு காண்கிறது)

அறிந்திராத தகவல்களை முந்தித் தருவதிலும் அறிந்துகொள்வதிலும் ஒரு மகிழ்ச்சி இருக்கிறதல்லவா. அப்படி ஒரு தகவல் இது. முரசு அஞ்சல் வெளியீட்டு நிகழ்ச்சிக்காகத் தனித்துவமான முரசு அஞ்சல் இயலி (Chat bot) ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இந்த அரட்டைச் செயலி இப்போது பயன்பாட்டுக்கு வந்துள்ளது.

அறிவார்ந்த உள்ளீட்டு முறைகள், அழகு தமிழ் எழுத்துருக்கள், உரு நூல் வெளியீடு – இம்மூன்றும் சேர்ந்ததே முரசு அஞ்சல் வெளியீட்டு நிகழ்ச்சி. ஜூன் 27ஆம் தேதியன்று மலேசியாவின் கோலாலம்பூரிலும் ஜூலை 5ஆம் தேதியன்று சிங்கப்பூரிலும் ஜூலை 12ஆம் தேதி சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்திலும் நடைபெறவுள்ளன.

#TamilSchoolmychoice

இவற்றுக்கான முன்பதிவு தொடங்கி வேகமாக நடைபெற்று வருகிறது. மலேசிய முன்பதிவு கிட்டத்தட்ட முடிவுறும் நிலையில் இருக்கிறது. மற்ற நகரங்களிலும் குறைவான எண்ணிக்கையிலான இடங்கள் மட்டுமே எஞ்சியிருக்கின்றன.

இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் அனைவருக்குமே சிறப்புப் பரிசுகள் உள்ளன. முரசு அஞ்சலின் ​நெடுங்காலப் பயனராக இருந்தாலும் புதிதாக அறிந்து கொண்டு பயன்படுத்துபவராக இருந்தாலும், அட, இனிதான் பயன்படுத்தப் போகிறேன் என்றாலும்கூடப் பரிசு உண்டு. என்ன பரிசு, எப்போது, எப்படிக் கிடைக்கும் போன்ற தகவல்களை எல்லாம் புதிய அரட்டைச் செயலியே சொல்லிவிடும்.

உதவி, பரிசு, விவரம் ​போன்ற குறியீட்டுச் சொற்களை உள்ளிட்டு அளவளாவினால், அரட்டைச் செயலி தகுந்த பதில்களைக் கொடுக்கும். என்னென்ன குறியீட்டுச் சொற்கள் உள்ளன என்கிற தகவலையும் செயலியே பட்டியல் போட்டுத் தந்துவிடும். தேவையானதைத் தேர்ந்தெடுத்து அனுப்பினால் உடனுக்குடன் பதில் கிடைக்கும். சில குறியீட்டுச் சொற்கள் வெளியீடு நாளன்றுதான் பயன்பாட்டுக்கு வரும். எனவே, அரட்டைச் செயலி அதற்குரிய பதிலைத் தந்து காத்திருக்கச் சொல்லும். நம்மை வியப்பில் ஆழ்த்தக் கூடிய சில ரகசியக் குறியீட்டுச் சொற்களும் ​உண்டு. அதெல்லாம் நிகழ்ச்சிக்கு வந்தால் மட்டும்தான் தெரியவரும்.

பதிவு செய்யவும், பதிவு செய்தோமா இல்லையா என்று மறந்துவிட்டால் சரிபார்க்கவும், கடைசியாக எப்போது முரசு அஞ்சல் உரிமம் வாங்கினோம் என அறிந்துகொள்ளவும் முடியும். அவ்வளவு ஏன், நிகழ்ச்சி நடக்கும்போது மேடையில் காண்பிக்கப்படும் விளக்கத்துக்கும் உரைக்கும் உங்கள் கருத்துகளை உணர்ச்சிக் குறியீடுகளாக அனுப்பிவைத்தால்கூட பதில் கொடுக்கும்.

நிகழ்ச்சி முடிந்தவுடன் உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் முடியும். பக்கம் பக்கமாக எழுதச் சொல்லமாட்டோம். கொடுக்கப்பட்டவற்றில் ஒன்றைத் தேர்ந்தெடுத்துக் கருத்தைப் பதிவு செய்தால் போதுமானது. அப்படி நிறைய எழுத விரும்பினால் முரசு அஞ்சல் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம். உங்கள் சமூகவலைத் தளக் கணக்குகளில் எழுதி முரசு அஞ்சலைக் கோத்துவிட்டாலும் மகிழ்ச்சியே. இப்போதேகூட அளவளாவல் அனுபவத்தையோ பொதுவான கருத்தையோ அனுப்பலாம். கருத்து என்ற சொல்லைத் தட்டெழுதி அதன் பிறகு உங்கள் கருத்தினை எழுதி வாட்சாப்பில் அனுப்பலாம்.

ஆங்கிலம், தமிழ் இரு ​மொழிகளிலும் செய்தி அனுப்ப இயலும். உதவி அல்லது help எனத் தட்டெழுதி +60 196659018 அல்லது +91 9600369018 என்கிற எண்ணுக்கு வாட்சாப் செய்தியனுப்பலாம். இன்னும் பதிவு செய்யாதவர்கள் பதிவு செய்து கொள்ள கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

உங்கள் அனைவரையும் வெளியீட்டு நிகழ்ச்சியில் காண்பதற்கு ஆவலாயிருக்கிறோம்.

முன்பதிவுக்கான இணைப்பு:

https://anjal.net/launch

நன்றி : செல்லினம்