கோலாலம்பூர்: தேசிய கூட்டணியில் இணைய மசீச மற்றும் மஇகாவை பெர்சாத்து இரகசியமாக அணுகுவதாக அம்னோ இளைஞர் தலைவர் ஒருவர் கூறியுள்ளார்.
அம்னோ இளைஞர் பாட்ஸ்மெல் பாட்சில், தேசிய முன்னணியை விட்டு வெளியேறுவதற்காக மசீச மற்றும் மஇகாவை வற்புறுத்தியது அம்னோ அடிமட்டத்தை கோபப்படுத்தியதாக அவர் கூறினார்.
“நாங்கள் தேசிய முன்னணி அரசாங்கத்தை ஒன்றாக அமைத்தோம், ஆனால் அவர்கள் மஇகா மற்றும் மசீசவை ஈர்க்கிறார்கள். நாம் அனைவரும் அறிவோம், அவர்கள் மஇகாவை தேசிய கூட்டணிக்குள் சேர்க்க முயற்சித்தார்கள், ஆனால் பயனில்லை. அம்னோவுக்கு தெரியாமல் தேசிய கூட்டணியில் இணைய குறைந்தபட்சம் இரண்டு முதல் மூன்று முறை மசீசவை வற்புறுத்தினார்கள். இவை அனைத்திற்கும் பின்னால் என்ன காரணம்? ” என்று அவர் வினவியுள்ளார்.
கடந்த ஆண்டு ஆகஸ்டில், மஇகா தேசிய கூட்டணியில் இணைய வேண்டாம் என்று முடிவு செய்தது. இது ஆளும் கூட்டணியில் சேர வேண்டாம் என்ற அம்னோவின் சொந்த முடிவை அடிப்படையாகக் கொண்டது.