Home One Line P2 கொவிட்-19: மார்ச் மாதத்தில் 60,000-க்கும் அதிகமானோர் பிரேசிலில் மரணம்!

கொவிட்-19: மார்ச் மாதத்தில் 60,000-க்கும் அதிகமானோர் பிரேசிலில் மரணம்!

697
0
SHARE
Ad

பிரேசில்லா: மார்ச் மாதத்தில் பிரேசிலில் சுமார் 66,570 பேர் கொவிட் -19 தொற்று காரணமாக இறந்துள்ளனர். இது முந்தைய மாத பதிவை விட இரண்டு மடங்கு அதிகம் என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

நாட்டில் தொற்று சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதால் நாட்டின் சுகாதார சேவை விளிம்பிற்கு தள்ளப்பட்டுள்ளது.

அதிபர் ஜெய்ர் போல்சனாரோ நெருக்கடியைக் கையாளத் தவறியதற்காக கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டுள்ள நிலையில், இந்த வாரம் உயர்மட்ட பதவிகளில் உள்ளவர்களில் பலர் பதவி விலகி உள்ளனர்.

#TamilSchoolmychoice

புதன்கிழமை மேலும் 3,800 புதிய இறப்புகள் மற்றும் 90,000- க்கும் மேற்பட்ட புதிய கொவிட்-19 தொற்று சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டன.

பிரேசிலின் தினசரி இறப்புகள் தற்போது உலகில் உள்ள அனைத்து கொவிட்-19 இறப்புகளிலும் கால் பகுதியைக் கொண்டுள்ளது.