Home One Line P1 18 வயது வாக்காளர்கள்: அரசு பின்வாங்கியது ஏமாற்றம் அளிக்கிறது

18 வயது வாக்காளர்கள்: அரசு பின்வாங்கியது ஏமாற்றம் அளிக்கிறது

535
0
SHARE
Ad

கோலாலம்பூர்: முன்னாள் சட்டத் துறை தலைவர் டோமி தோமஸ் இரண்டாவது முறையாக வாய்ப்பு வழங்கப்பட்டாலும், அப்பதவியைப் பெறுவதற்கான சாத்தியக்கூறுகளை நிராகரித்தார்.

முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகமட் நம்பிக்கை கூட்டணி அரசாங்கத்தை வழிநடத்த திரும்பியது, எவ்வளவு ஆபத்தானது என்பதைக் காட்டிவிட்டது என்று தோமஸ் கூறினார்.

“இரண்டாவது முறையாக திரும்பி வரப்போவதில்லை. நான் முழுமையாக பணியாற்றினேன். அவ்வளவுதான். அடுத்ததை நோக்கிச் செல்லுங்கள்,” என்று அவர் ஒரு பிரத்யேக பேட்டியில் கூறினார்.

#TamilSchoolmychoice

ஜூன் 2018 முதல் 20 மாதங்களுக்கு தோமஸ் சட்டத் துறை தலைவராக பணியாற்றினார். தனது இரண்டு ஆண்டு ஒப்பந்தம் நிறைவடையும் முன்பே அவர் பதவி விலகினார்.

நம்பிக்கை கூட்டணி கீழ் மிகப்பெரிய சாதனையாக அமைந்தது, 18 வயது வாக்காளர்களின்  தானியங்கி பதிவுக்கான மசோதாவை நிறைவேற்றியது என்று அவர் கூறினார்.

அனைத்து 211 நாடாளுமன்ற உறுப்பினர்களும் இந்த மசோதாவுக்கு ஆதரவாக இருந்ததையும், இந்த முயற்சிகளுக்கு மூலக் காரணமாக இருந்த முன்னாள் இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சர் சைட் சாதிக்கையும் அவர் பாராட்டினார்.

“இந்த மசோதாவை ஒருமனதாக ஆதரித்தவர்கள், இப்போது ஆட்சியில் இருப்பவர்கள், பின்வாங்கிக் கொண்டார்கள். அதை செயல்படுத்த விரும்பவில்லை என்பது ஏமாற்றமளிக்கிறது.” என்று அவர் கூறினார்.