Home One Line P2 ரஜினிகாந்திற்கு தாதா பால்கே சாகேப் விருது அறிவிப்பு

ரஜினிகாந்திற்கு தாதா பால்கே சாகேப் விருது அறிவிப்பு

608
0
SHARE
Ad

சென்னை: நடிகர் ரஜினிகாந்திற்கு தாதா பால்கே சாகேப் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

51- வது தாதா பால்கே சாகேப் விருது குறித்து மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தமது டுவிட்டரில் இது குறித்து அறிவித்துள்ளார்.

தாதா சாகேப் பால்கே விருது, திரைத்துறையில் வழங்கப்படும் உயரிய விருதாகும்.

#TamilSchoolmychoice

“2020-ஆம் ஆண்டுக்கான தாதா சாகேப் பால்கே விருது இந்திய சினிமாவின் சிறந்த நடிகர்களில் ஒருவரான ரஜினிகாந்துக்கு வழங்கப்படும் என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். ஒரு நடிகராக, தயாரிப்பாளராக, திரைக்கதை எழுத்தாளராக அவரின் பங்களிப்பு சிறப்பானது,” என்று அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விருதைப் பெறுவதாக அறிவித்ததை அடுத்து, நடிகர் கமல்ஹாசன் ரஜினிகாந்திற்கு தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். திரையுலக பிரபலங்கள், இரசிகர்களும் ரஜினிக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.