Home One Line P1 பிரதமர், துணைப் பிரதமரை அம்னோ ஜூன் மாதத்தில் தேர்ந்தெடுக்கும்- அனுவார் மூசா

பிரதமர், துணைப் பிரதமரை அம்னோ ஜூன் மாதத்தில் தேர்ந்தெடுக்கும்- அனுவார் மூசா

604
0
SHARE
Ad

கோலாலம்பூர்: இந்த ஜூன் மாதத்தில், அடிமட்ட அம்னோ உறுப்பினர்களின் தேர்வுகளின் மூலம், அம்னோ பிரதமர் மற்றும் துணை பிரதமர் வேட்பாளரைத் தேர்ந்தெடுக்கும் என்று முன்னாள் அம்னோ தலைமைச் செயலாளர் அனுவார் மூசா தெரிவித்தார்.

15- வது பொதுத் தேர்தலுக்கு முன்னதாக இரண்டு முக்கிய பதவிகளுக்கு, அம்னோவிலிருந்து வேட்பாளர்கள் குறித்து பலர் அவரிடம் கேட்டதாக அனுவார் கூறினார்.

“அம்னோ அரசியலமைப்பு, பதவிக் காலம் மூன்று ஆண்டுகளுக்கு மட்டுமே என்று வரையறுக்கப்பட்டுள்ளது. 30 ஜூன் 2018 அன்று கடைசி தேர்தல் நடந்தது. ஜூன் 2021- இல் மூன்று ஆண்டுகள் நிறைவாகிறது.

#TamilSchoolmychoice

“விதிகளை கடுமையாக கடைப்பிடிக்கும், மற்றும் அடிமட்டத்தின் குரலை வலுவாக நம்பியிருக்கும் ஒரு கட்சி என்ற வகையில், தலைமைத்துவத்தை தீர்மானிக்க மீண்டும் அடிமட்டத்திடம் ஒப்படைக்க உள்ளோம். அம்னோவிலிருந்து பிரதமர் மற்றும் துணைப் பிரதமர் வேட்பாளர்கள் இந்த ஜூன் மாதத்தில் அம்னோ உறுப்பினர்களால் தேர்தல்கள் மூலம் முடிவு செய்யப்படுவார்கள்.

“அம்னோ தலைவரையும், துணைத் தலைவரையும் தேர்ந்தெடுக்கும், “என்று அவர் முகநூல் பதிவில் கூறினார்.

எந்த பெயர்களையும் குறிப்பிடவில்லை என்றாலும், அப்பதிவில் அனுவார் அவரது படம் உட்பட, பிற அம்னோ தலைவர்களின் படங்களை பதிவேற்றினார்.

அவர்களில் ஹிஷாமுடின் ஹுசைன், இஸ்மாயில் சப்ரி யாகோப், ஷாஹிடான் காசிம், கைரி ஜமாலுடின் மற்றும் தமது படத்தையும் அனுவார் பதிவிட்டிருந்தார்.