Home One Line P1 பிரதமர் சரவாக்கிற்கு அதிகாரப்பூர்வ வருகை!

பிரதமர் சரவாக்கிற்கு அதிகாரப்பூர்வ வருகை!

625
0
SHARE
Ad

கோலாலம்பூர்: பிரதமர் மொகிதின் யாசின் மற்றும் அவரது மனைவி நூரைனி அப்துல் ரஹ்மான் சரவாக்கிற்கு அதிகாரப்பூர்வ வருகை தந்துள்ளனர்.

சரவாக் அனைத்துலக விமான நிலையத்தை வந்தடைந்த பிரதமர் மற்றும் அதிகாரிகளை வரவேற்க சரவாக் முதல்வர் அபாங் ஜோஹாரி ஒபெங் மற்றும் அவரது மனைவி ஜுமாஅனி துவாங்கு புஜாங், மற்றும் துணை முதல்வர் ஹாஜி அவாங் தெங்கா அலி ஹசான் மற்றும் அவரது மனைவி ஆகியோர் வந்திருந்தனர்.

இன்று, பிரதமர் அரசு ஊழியர்களுடன் ஒரு சிறப்புக் கூட்டத்தில் கலந்து கொள்வார். பின்பு மாநில ஆளுநர் அப்துல் தைப் மஹ்மூத்தை அவரது இல்லத்தில் சந்திக்க உள்ளார். அதனை அடுத்து, மாலையில், அவர் மாநில சட்டமன்ற வளாகத்தில் அபாங் ஜோஹரி மற்றும் காபுங்கான் பார்டி சரவாக்கின் பிற தலைவர்களைச் சந்திப்பார்.

#TamilSchoolmychoice

முன்னதாக, மத்திய அரசுடனான உறவு குறித்து சரவாக் மாநிலம் விரைவில் அதன் முடிவை அளிக்கும் என்று அபாங் ஜோஹாரி கூறியிருந்தார். அதற்கு பிறகு பிரதமரின் இந்த வருகை அமைந்துள்ளது.