கூச்சிங்: மத்திய அரசாங்கத்துடனான மாநில உறவு குறித்து சரவாக் அரசு விரைவில் ஒரு முடிவை எடுக்கும் என்று முதல்வர் அபாங் ஜோஹாரி ஓபெங் நேற்று தெரிவித்தார்.
இந்த முடிவைப் பற்றி விரிவாக அவர் விளக்கவில்லை, ஆனால், 1963 மலேசியா ஒப்பந்தத்தின் (MA63) கீழ் அதன் உரிமைகளை மீண்டும் பெறுவதற்கான அரசின் கூற்றுடன் தொடர்புடையது என்று நம்பப்படுகிறது.
“(சரவாக்கின் உரிமைகளை மீட்டெடுப்பதற்கான முயற்சிகள்) MA63 இன்னும் செயல்படுத்தப்பட்டு போராடப்பட்டு வருகிறது. விரைவில் மலேசியா கூட்டமைப்பில் நமது மாநில உறவுகள் குறித்து ஒரு முடிவை எடுப்போம் என்று நான் நம்புகிறேன்,” என்று மக்களுடன் ஒரு கூட்டத்தில் உரையாற்றியபோது அவர் கூறினார்.
இருப்பினும், விழாவுக்குப் பின்னர் ஒரு செய்தியாளர் கூட்டத்தில் பேசிய , அபாங் ஜோஹாரி மத்திய அரசுடனான மாநில அரசின் உறவு குறித்து தனது அறிக்கை குறித்து மேலும் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார்.