Home நாடு பினாங்கு இந்திய வாக்காளர்களைக் கவர பெரிக்காத்தான் கூட்டணியில் மோதல்கள் ஆரம்பம்!

பினாங்கு இந்திய வாக்காளர்களைக் கவர பெரிக்காத்தான் கூட்டணியில் மோதல்கள் ஆரம்பம்!

57
0
SHARE
Ad

ஜோர்ஜ்டவுன் : பினாங்கு சட்டமன்றத்திற்கான தேர்தலுக்கும் அடுத்த நாடாளுமன்றத் தேர்தலுக்கும் இன்னும் சில ஆண்டுகள் கால அவகாசம் இருப்பினும் அந்த மாநிலத்தின் இந்திய வாக்காளர்களைக் கவர்வதற்கான முன்னெடுப்புகள் இப்போதே தொடங்கி விட்டன.

பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியில் சீன சமூகத்தைப் பிரதிநிதிக்கும் கட்சியாக கெராக்கான் இணைந்திருக்கும் நிலையில் இந்தியர்களின் பிரதிநிதியாக புனிதன் தலைமையேற்றிருக்கும் மலேசிய இந்தியர் மக்கள் கட்சி இணைந்திருக்கிறது.

பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணி பினாங்கில் கெராக்கானைக் கொண்டு சீன வாக்காளர்களைக் கவர்வதில் தோல்வி கண்டிருப்பதால், இனி இந்திய வாக்காளர்களைக் குறிவைத்து அந்தக் கூட்டணி நகரத் தொடங்கும் என ஊடக ஆரூடங்கள் அண்மையில் வெளியிடப்பட்டன.

#TamilSchoolmychoice

அதைத் தொடர்ந்து மலேசிய இந்தியர் மக்கள் கட்சியின் தலைவரான புனிதன் பினாங்கில் இந்திய வாக்காளர்களைக் கவர தனது கட்சி தயார் எனக் கூறியிருந்தார். அதேவேளையில் பினாங்கில் எந்த இந்தியர் கட்சியை முன்னிறுத்த வேண்டும் என்பதை பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியே முடிவு செய்யட்டும் என சில தரப்புகள் தெரிவித்திருந்தன.

பினாங்கு மாநிலத்தின் முன்னாள் துணை முதல்வர் பேராசிரியர் பி.இராமசாமி தலைமையிலான உரிமை கட்சியும் பினாங்கு இந்தியர்களிடையே கணிசமான செல்வாக்கைக் கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

அண்மைய இடைத் தேர்தல்களில் மற்ற இந்திய எதிர்க்கட்சிகளைவிட இராமசாமியின் உரிமை கூடுதலான ஆதரவைப் பெற்றதாகக் கணிக்கப்படுகிறது.

இதுகுறித்து கருத்துரைத்த உரிமை கட்சியின் துணைத் தலைவர் டேவிட் மார்ஷல், இந்திய வாக்குகளைக் கவர கெராக்கான், மலேசிய இந்தியர் மக்கள் கட்சி என இரண்டு கட்சிகளுமே தேவையில்லை எனக் கூறியுள்ளார்,