Home உலகம் அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானம் – இராணுவ ஹெலிகாப்டர் மோதல்! அனைவரும் மரணம்!

அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானம் – இராணுவ ஹெலிகாப்டர் மோதல்! அனைவரும் மரணம்!

200
0
SHARE
Ad

வாஷிங்டன் : அமெரிக்கன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் ஒன்று அமெரிக்க இராணுவ பிளாக் ஹாக் ஹெலிகாப்டருடன் நடுவானில் மோதியதால் ஏற்பட்ட விபத்தில் பயணிகள் அனைவரும் மரணமடைந்ததாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்தார்.

வாஷிங்டன் பகுதியில், ரீகன் வாஷிங்டன் தேசிய விமான நிலையத்திற்கு அருகிலுள்ள பனிமூடிய பொடோமாக் நதியில் விமானம் வீழ்ந்ததால் மீட்புப் பணிகளில் கடும் சவால்கள் ஏற்பட்டிருக்கின்றன. 64 பேர் விமானத்தில் பயணம் செய்தனர். இவர்களில் 60 பேர் பயணிகள் – நால்வர் விமான ஊழியர்களாவர். இதுவரையில் 40-க்கும் மேற்பட்ட சடலங்கள் மீட்கப்பட்டிருக்கின்றன.

விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரில் 3 இராணுவ வீரர்கள் பயணம் செய்தனர்.

#TamilSchoolmychoice

2001-ஆம் ஆண்டுக்குப் பிறகு அமெரிக்காவில் நிகழ்ந்த மோசமான விமான விபத்தாக இது கருதப்படுகிறது.

விபத்துக்குள்ளான விமானத்தில் பனிச்சறுக்கு விளையாட்டாளர்கள் சிலரும் இருந்தனர்.

இந்த விமானம் கன்சாஸில் இருந்து புறப்பட்டது.

இதற்கிடையில் விமானத்திலிருந்து தரவுகளைக் கொண்ட இரண்டு கறுப்புப் பெட்டிகள்  மீட்கப்பட்டிருக்கின்றன.

பயணிகள் விமானம், ரீகன் விமான நிலையத்தில் தரையிறங்கும் நிலையில் இருந்தபோது இந்த மத்திய-வான் மோதல் நடந்தது. வான் போக்குவரத்து கட்டுப்பாட்டு கோபுரத்திற்கும் பிளாக் ஹாக் ஹெலிகாப்டருக்கும்  இடையிலான வானொலி உரையாடல் தொடர்புகள், ஹெலிகாப்டர் குழுவினர், விபத்துள்ளான விமானம் அருகில் இருப்பதை அறிந்திருந்ததைக் காட்டியது.

பென்டகன் என்னும் அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சின் தலைமையகம் இந்த விபத்தைப் பற்றி விசாரணை நடத்துவதாக அறிவித்திருக்கிறது.