Home One Line P1 “அம்னோ, தேசிய முன்னணியுடனே இணைந்திருக்கும்” – சாஹிட் அறிவிப்பு

“அம்னோ, தேசிய முன்னணியுடனே இணைந்திருக்கும்” – சாஹிட் அறிவிப்பு

685
0
SHARE
Ad

கோலாலம்பூர் : அம்னோ, தேசிய முன்னணி கூட்டணியிலேயே இணைந்திருக்கும் என அம்னோ தலைவர் டத்தோஸ்ரீ சாஹிட் இப்ராகிம் அறிவித்துள்ளார். நேற்று சனிக்கிழமை (மார்ச் 27) தொடங்கிய இரண்டு நாள் தேசியப் பொதுப் பேரவையில் இன்று தலைமையுரையாற்றியபோது சாஹிட் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

அம்னோவில் எதிரிகள் உள்ளேயே இருக்கிறார்கள் என்று சாடிய சாஹிட் “ஒட்டுண்ணிகள்” போல் இவர்கள் கூடவே இருந்து கொண்டு அம்னோவுக்கு எதிராகவும், பெர்சாத்து கட்சிக்கு ஆதரவாகவும் செயல்பட்டு வருகிறார்கள் என்றும் தனதுரையில் தெரிவித்தார்.

அம்னோவை உடைப்பதற்கும், அதன் ஆதரவை விலை கொடுத்து வாங்குவதற்கும் சில தரப்புகள் முயற்சி செய்தன என்றும் எனினும் தான் அதற்கெல்லாம் இடம் கொடுக்கவில்லை என்றும் சாஹிட் மேலும் தெரிவித்திருக்கிறார்.

#TamilSchoolmychoice

பெர்சாத்துவுடனான உறவுகளை முறிக்கும் விதமாக இன்றைய அம்னோ பொதுப் பேரவையில் முடிவுகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. நேற்று தொடங்கிய அம்னோ பொதுப்பேரவையில் கலந்து கொண்ட அம்னோ பேராளர்கள் பெர்சாத்து கட்சியைத் கடுமையாகச் சாடி கருத்துகளை வெளியிட்டனர்.

நேற்று சனிக்கிழமை அம்னோ இளைஞர், மகளிர், புத்ரா பிரிவுகளின் பேராளர் மாநாட்டைத் தொடக்கி வைத்து உரையாற்றிய துணைத் தலைவர் டத்தோஸ்ரீ முகமட் ஹாசான், பிரதமர் பதவி அம்னோவுக்குச் சொந்தமானது என்றும், கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக நாட்டை சிறப்பாக வழிநடத்திய திறனும் அனுபவமும் அம்னோவுக்கு உண்டு என்றும் கூறினார்.