Home One Line P1 பெர்சாத்து ஓர் “ஒட்டுண்ணி” என அம்னோ புத்ரி தலைவர் சாடல்!

பெர்சாத்து ஓர் “ஒட்டுண்ணி” என அம்னோ புத்ரி தலைவர் சாடல்!

557
0
SHARE
Ad

கோலாலம்பூர்: பெர்சாத்து  ஓர் “ஒட்டுண்ணி” என்று அம்னோ புத்ரி தலைவர் சாஹிடா சாரிக் கான் கூறியுள்ளார். மேலும் அம்னோ அதற்கு “உரமாக” செயல்பட வேண்டியதன் அவசியம் குறித்தும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இன்று நடைபெறும் வருடாந்திர பொதுக் கூட்டத்தில் அம்னோ புத்ரி பிரதிநிதிகளிடம் பேசிய சாஹிடா, பெர்சாத்து வெறுமனே அம்னோவில் இருந்து பிரிந்து சென்ற கட்சி என்பதை நினைவூட்டினார்.

“அம்னோவிலிருந்து தோன்றிய விதைகளிலிருந்து பெர்சாத்து வளர்கிறது. இது ஜசெக மற்றும் பிகேஆரிடமிருந்து ஆதரவு பெற்றதால் மட்டுமே தப்பிப்பிழைத்தது, ” என்று அவர் கூறினார்.

#TamilSchoolmychoice

பெர்சாத்துவால் எதிர்காலத்தில் அம்னோ அதன் நிலையை  இழக்க நேரிடும் என்று அவர் எச்சரித்தார்.

“எங்களைப் பொறுத்தவரை, ஜசெக இல்லை, பிகேஆர் இல்லை., என்பது ஓர் ஒப்பந்தம். இதை மறுக்க முடியாது, இதனுடன் 100% உடன் நான் உடன்படுகிறேன். பெர்சாத்துவையும் இதில் சேர்க்க வேண்டும்,” என்று அவர் கூறினார்.