Home Featured இந்தியா “இந்திய மருத்துவ முறைகளில் ஒருங்கிணைப்பு தேவை” – டாக்டர் சுப்ரா பரிந்துரை!

“இந்திய மருத்துவ முறைகளில் ஒருங்கிணைப்பு தேவை” – டாக்டர் சுப்ரா பரிந்துரை!

1502
0
SHARE
Ad

dr-subraபெங்களூர் – நேற்று ஞாயிற்றுக்கிழமை பெங்களூர் அனைத்துலகக் கண்காட்சி அரங்கில் நடைபெற்ற 14-வது பிரவாசி பாரதிய திவாஸ் 2017, மாநாட்டில், ”இந்தியாவை உலகளாவிய சுகாதாரம் மற்றும் ஆரோக்கிய மையமாக மாற்றுவது” என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கில் மலேசிய சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் எஸ்.சுப்ரமணியம் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு உரை ஆற்றினார்.

இந்திய சுகாதார அமைச்சர் ஸ்ரீ ஜே.பி.நாடா தலைமையில் இக்கருத்தரங்கு நடைபெற்றது. இக்கருத்தரங்கில் ஏராளமான மருத்துவர்களும், மருத்துவத்துறையைச் சார்ந்தவர்களும் கலந்து கொண்டனர்.

dr-subra1இக்கருத்தரங்கில் டாக்டர் சுப்ரா பேசுகையில், “இந்தியாவில் பாரம்பரிய மருத்துவ முறையும், மேற்கத்திய மருத்துவ முறையும் உள்ளது. உலகளவில் பாரம்பரிய மருத்துவ முறையைத் தேடி வருபவர்கள் அதிகமாக இருக்கின்றார்கள். நோய் வருவதற்கு முன் தங்களைப் பாதுகாக்க சிலரும், நோய் வந்த பிறகு மறுவாழ்விற்காக சிலரும் இந்திய மருத்துவ முறைகளை நாடி வருகின்றார்கள். இந்த இரண்டு சிறப்புகளும் இந்தியாவில் உள்ளது. இந்த இரண்டும் தனித்தனியாக இல்லாமல், ஒருங்கிணைக்கப்பட்ட ஒரு மருத்துவ முறையாக இந்திய அரசு மாற்றினால் அது மிகப் பெரிய ஈர்ப்பு சக்தியாக இருக்கும். உதாரணமாக சீனாவில் இந்த ஒருங்கிணைப்பு முறை வளர்ந்து வருகின்றது. அதைப் போல் இந்தியாவும் அதற்கு முக்கியத்துவம் கொடுத்தால் இன்னும் சிறப்பாக இருக்கும். அதன் மூலம் நோய்க்கு சிகிச்சைக்காக மட்டும் அல்லாமல், நோய் வராமல் தடுக்கும் வகையில் இந்த மருத்துவ வழிமுறைகள் மக்களுக்குப் பயனளிக்கும்” என்று டாக்டர் சுப்ரா தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

மேலும், அவர் பேசுகையில், இந்தியாவின் பாரம்பரிய மருத்துவ முறையைப் பயில மலேசியாவில் இருந்து 10 மாணவர்கள் கல்வி உதவித் தொகை பெற்று கல்வி கற்று வருவதாகவும், அவர்களில் மலாய் மாணவரும் ஒருவர் என்றும் சுப்ரா தெரிவித்தார்.

செய்தி: ஃபீனிக்ஸ்தாசன்