Home Featured நாடு அப்பெண்களுக்கு கையில் இருப்பது விஷம் என்று தெரியும் – காலிட் தகவல்!

அப்பெண்களுக்கு கையில் இருப்பது விஷம் என்று தெரியும் – காலிட் தகவல்!

860
0
SHARE
Ad

Kim jong nam murderகோலாலம்பூர் – கிம் ஜோங் நம் கொலையில் ஈடுபட்டதாக நம்பப்படும் இரு பெண்களும், தாங்கள் வைத்திருப்பது விஷம் தான் என்பதை நன்கு அறிந்தே அதைப் பயன்படுத்தியிருக்கிறார்கள் என்று தேசிய காவல்படைத் தலைவர் டான்ஸ்ரீ காலிட் அபு பக்கர் இன்று புதன்கிழமை கூறினார்.

முன்னதாக, வெளிவந்த தகவல் ஒன்றில், அப்பெண்கள் இருவரிடமும், தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றின் வேடிக்கை நிகழ்ச்சி என்று கூறி, சிலர் இதனை செய்ய வைத்திருக்கிறார்கள் என்று கூறப்பட்டது.

ஆனால், காலிட் இது குறித்து செய்தியாளர்களிடம் கூறுகையில், இரகசிய கேமராவில் பதிவான காட்சிகளில், கிம் ஜோங் நம், முகத்தில் விஷம் தோய்த்த துணியைப் போர்த்திவிட்டு, அப்பெண் நேராக கழிவறையை நோக்கி ஓடுகிறார். எனவே அது விஷம் தான் என்பது அவருக்கு நன்கு தெரிந்திருக்கிறது என்று தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

எனினும், இந்தோனிசிய காவல்துறை, இக்கொலையில் ஈடுபட்டதாக நம்பப்படும் இரு பெண்களில் ஒருவர், தொலைக்காட்சி வேடிக்கை நிகழ்ச்சி என்று நம்பியே இதனை செய்திருக்கிறார் என்று கூறுகிறது.