Home இந்தியா சுதந்திர தினத்தை முன்னிட்டுச் சென்னை விமான நிலையத்தில் 7 அடுக்குப் பாதுகாப்பு!

சுதந்திர தினத்தை முன்னிட்டுச் சென்னை விமான நிலையத்தில் 7 அடுக்குப் பாதுகாப்பு!

409
0
SHARE
Ad

2Chennai-Airport-Security(C)சென்னை, ஆகஸ்ட் 12-  சுதந்திர தினத்தைச் சீர்குலைக்கும் வகையில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தக் கூடும் என்ற மத்திய உளவுத்துறையின் எச்சரிக்கையைத் தொடர்ந்து, தமிழகம் முழுவதிலும் முக்கிய நகரங்களில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

சென்னை விமான நிலையத்தில் 24 மணி நேரமும் 7 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும், தலைமைச் செயலகம் அமைந்துள்ள புனித ஜார்ஜ் கோட்டையிலும் அதுபோல் 7 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தலைமைச் செயலகம் அமைந்துள்ள பகுதிகளில், 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மக்கள் அதிகம் கூடும் பேருந்து நிலையம், ரயில் நிலையங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

கடல் மார்க்கமாகத் தீவிரவாதிகள் ஊடுருவக் கூடும் என்பதால் கடலோர மாவட்டங்களில், கடலோரப் பாதுகாப்புப் படையினர் தீவிரக் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழகத்திலுள்ள அனைத்துச் சோதனைச் சாவடிகளிலும் வாகன சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.தங்கும் விடுதிகளிலும் காவல்துறையினர் சோதனை மேற்கொண்டுள்ளனர்.

வெடிகுண்டு நிபுணர்கள்,மோப்ப நாய்களின் உதவியுடன் தொடர் சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதுபோல் தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.