கோலாலம்பூர், ஆகஸ்ட் 12 – பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் பயன்படுத்தியதாக நம்பப்படும் அரசாங்கத்தின் பழைய ஜெட் ரக விமானம் ஒன்று அடுத்த வாரம் செவ்வாய்கிழமை ஏலத்திற்கு வருகின்றது.
‘உத்துசான் மலேசியா’ நாளிதழில் இன்று தற்காப்பு அமைச்சின் நிதித்துறை வெளியிட்டுள்ள விளம்பரத்தின் படி, அந்த ஜெட் விமானத்தின் ஆரம்ப விலை 80.5 மில்லியன் ஆகும்.
“மலேசிய அரசாங்க உயர் அதிகாரியின் விமானம் (போயிங் வர்த்தக ஜெட் 737-700) விற்பனைக்கு வருகின்றது” என்று அந்த விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
(உத்துசானில் வெளிவந்துள்ள விளம்பரம்)
அரசாங்கத்தின் இந்த நடவடிக்கை குறித்து பிகேஆர் கட்சியைச் சேர்ந்த பாண்டான் நாடாளுமன்ற உறுப்பினர் ரபிசி ரம்லி ஏற்கனவே குறிப்பிட்டிருந்ததாகவும், போயிங் ஜெட் அந்த இரகத்தில் ஒரே ஒரு விமானம் தான் புத்ராஜெயாவுக்குச் சொந்தமாக உள்ளதாகத் தெரிவித்திருந்ததாகவும் ‘த மலாய் மெயில்’ குறிப்பிட்டுள்ளது.
இந்நிலையில் இது குறித்து ரபிசி இன்று அளித்துள்ள பேட்டியில், “ஆமாம். அது பிபிஜெ (Boeing Business Jet) அரசாங்க விமானம் தான். அவர்களிடம் அந்த ஒரு வர்த்தக இரக விமானம் தான் உள்ளது. அது பழசாகிவிட்டதாலும், பராமரிப்பு பிரச்சனைகள் ஏற்படுவதாலும், அதை மாற்ற அரசாங்கம் நினைக்கிறது” என்று ரபிசி மலாய் மெயில் இணையதளத்திடம் தெரிவித்துள்ளார்.
மேலும், அந்த 16 ஆண்டுகள் பழைமையான விமானம் தற்போதைய சந்தை விலைக்குத் தான் விற்பனை செய்யப்படுகின்றதா அல்லது கூடுதலாகவோ, குறைவாகவோ விற்பனை செய்யப்படுகின்றதா என்பது குறித்து தனக்கு தெரியாது என்றும் ரபிசி தெரிவித்துள்ளார்.
ரபிசி கடந்த மார்ச் மாதம் வெளியிட்ட அறிக்கை ஒன்றில்