கொழும்பு,ஆகஸ்ட் 12- இங்கிலாந்தின் முன்னாள் பிரதமர் டோனி பிளேர், தனது குடும்பத்தினருடன் இலங்கைக்குச் சென்றுள்ளார்.
வெளி விவகாரத்துறை அமைச்சர் மங்கள சமரவீரவின் அழைப்பின் பேரில் அவர் இலங்கைக்குச் சென்றுள்ளதாகத் தெரிகிறது.
இரண்டு வார காலம் அவர் தனது குடும்பத்தினருடன் இலங்கையில் தங்கியிருப்பார் எனக் கூறப்படுகிறது.
இலங்கை நாடாளுமன்றத் தேரதல் வரும் 17-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், இங்கிலாந்தின் முன்னாள் பிரதமர் இலங்கைக்குச் சென்றுள்ளது, பல சந்தேகங்களை எழுப்பியுள்ளது.