Home இந்தியா இந்தியாவை உலுக்கிய கொலை:மகளை எரித்துக் காட்டில் வீசிய டிவி அதிபர் இந்திராணி!

இந்தியாவை உலுக்கிய கொலை:மகளை எரித்துக் காட்டில் வீசிய டிவி அதிபர் இந்திராணி!

656
0
SHARE
Ad

27-1440661333-indrani-mukerjea-13-600மும்பை – மும்பையில் தொலைக்காட்சி நிறுவனர் இந்திராணி, பெற்ற மகளையே கொன்று எரித்த சம்பவம் மும்பையை மட்டுமல்ல; இந்தியாவையே உலுக்கிப் போட்டுள்ளது.

இக்கொலையில்  விடை தெரியாத பல மர்மங்கள், சந்தேகங்கள், குழப்பங்கள் நிறைந்திருப்பதால், இந்தியாவிலேயே பெரும் பரபரப்பான கொலை வழக்காக இது மாறும் சாத்தியக்கூறுகள் நிறைய உள்ளதாகத் தெரிகிறது.

இந்திராணி தன் மகள் ஷீனா போராவைக் கொலை செய்து உடலை எரித்துக் காட்டுக்குள் வீசி விட்டார் எனக் கைது செய்யப்பட்டுள்ளார்.

#TamilSchoolmychoice

இந்திராணியின் திருமண வாழ்க்கை:

இந்திராணிக்குத் தற்போது 43 வயது. கணவர் பெயர் பீட்டர் முகர்ஜி. இவர் இந்திராணிக்கு 3-ஆவது கணவர்.

இந்திராணி, சித்தார்த் தாஸ் என்பவரை முதலில் திருமணம் செய்து சில காலம் அவருடன் வாழ்ந்துள்ளார். இதில் அவர்களுக்கு ஷீனா என்ற மகளும், மிகேல் என்ற மகனும் பிறந்தனர்.

பின்னர் அவரை விட்டு விலகி, இரண்டாவதாகச் கொல்கத்தாவைச் சேர்ந்த தொழில் அதிபர் சஞ்சீவ் கண்ணா என்பவரைத் திருமணம் செய்தார். அவரோடும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுப் பிரிந்தார்.

இந்நிலையில், பீட்டர் முகர்ஜி நடத்திய ’ஸ்டார் இந்தியா நெட்வொர்க்’ என்ற தொலைக்காட்சி  நிறுவனத்தில் இந்திராணி மனித வள மேம்பாட்டு அதிகாரியாகச் சேர்ந்தார்.

மனைவியைப் பிரிந்திருந்த பீட்டர் முகர்ஜியும், கணவனைப் பிரிந்திருந்த இந்திராணியும் நெருங்கிப் பழகி 2002-ல் திருமணமும் செய்து கொண்டனர்.

பீட்டர் முகர்ஜியிடம் ஷீனாவைத் தனது சகோதரி என்றும், மிகேலைத் தனது தம்பி என்றும் அறிமுகப்படுத்தியுள்ளார் இந்திராணி. அப்படியே அவர்களும் காட்டிக் கொண்டனர்.

இந்திராணிக்கு 16 வயதாக இருக்கும் போதே மகளும் மகனும் பிறந்துவிட்டதாலும்,தோற்றத்தில் அவரும் மிகவும் இளமையாக இருந்ததாலும் எல்லோரும் அப்படித்தான் நினைத்தனர்.

பின்னர் பீட்டர் முகர்ஜி ’9 எக்ஸ் மீடியா’ என்ற பெயரில் மற்றொரு தொலைக்காட்சியை ஆரம்பித்து அதன் நிறுவனராக இந்திராணியை நியமித்தார்.

இந்திராணியின் மகள் தகாத காதல்:

இந்நிலையில் பீட்டரின் முதல் மனைவியின் மகன் ராகுலுக்கும், இந்திராணியின் மகள் ஷீனாவிற்கும் காதல் ஏற்பட்டுவிட்டது.

இதைக் கண்டு கொதித்துப் போனார் இந்திராணி.இருவருக்கும் சகோதரன் சகோதரி முறை என எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் கேட்காததால், எங்கே இந்த உறவு மூலம் த்ன்னுடைய குட்டு வெளிப்பட்டுவிடுமோ என்கிற பயத்திலும், பெற்ற மகள் என்றும் பார்க்காமல் ஷீனாவைக் கொன்று எரித்துத் தனது ஓட்டுநரின் உதவியுடன் காட்டில் கொண்டு போய் எறிந்து விட்டு வந்து விட்டாள்.

27-1440661213-sheena-bora-600பிணம் சிக்கியது:

2012ல் ஷீனாவின் பிணம் ரெய்கட் வனப் பகுதியில் கண்டு பிடிக்கப்பட்டது. போலீசார் பிணத்தைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வந்தனர்.

ஷீனா போரா மும்பையின் பிரபல தனியார் தொலைக் காட்சி பெண் அதிபர் இந்திராணி குடும்பத்தைச் சேர்ந்தவர் எனத் தெரியவந்தது. போலீசார் இந்திராணியிடம் விசாரித்தபோது ஷீனாவைத் தனது தங்கை என்றும் தன்னுடன் வசித்து வருவதாகவும் கூறினார்.

காவ்ல்துறையினருக்கு இதில் சரியான துப்பு கிடைக்காததாலும், கொலை செய்யப்பட்டவர் பெரிய குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதாலும் வழக்கை அப்படியே கிடப்பில் போட்டுவிட்டனர்.

ஓட்டுநரால் இந்திராணி சிக்கினார்:

ஆனால்,இந்தக் கொலையில் மூன்று ஆண்டுகள் கழித்துத் திடுக்கிடும் திருப்பம் ஏற்பட்டது.

தீவிரவாதிகளால் அடிக்கடி தாக்குதலுக்குள்ளான மும்பையில் எப்போதுமே வாகனச் சோதனையும் அதிகம். அதன்படி காவல்துறையினர் ஒரு காரை நிறுத்திச் சோதனையிட்ட போது இந்திராணியின் ஓட்டுநர் ஷாம் மனோகர் ராய் துப்பாக்கியுடன் பிடிபட்டான். அவன் சட்டவிரோதமாகத் துப்பாக்கி வைத்திருந்தது தெரியவந்தது.

அவனைத் தோண்டித் துருவி விசாரித்ததில் கொலைச் சம்பவத்தைப் புட்டுப் புட்டு வைத்தான்.

இந்திராணி கைது:

இதையடுத்து இந்திராணியைக் கைது செய்து விசாரித்தனர். தப்பிக்க வழியில்லாததால் அவரும் குற்றத்தை ஒப்புக் கொண்டார்.

இதற்கிடையே கொல்கத்தாவில் வசிக்கும் இந்திராணியின் 2-ஆவது கணவர் சஞ்சீவ் கன்னாவையும் இந்தக் கொலையில் உடந்தையாக இருந்த குற்றத்திற்காகக் கைது செய்தனர்.

கணவரிடம் நாடகம்:

ஷீனாவைக் கொன்று எரித்து விட்டுக் கணவரிடம் அவளை அமெரிக்காவுக்குப் படிக்க அனுப்பி விட்டேன் என்று கதை விட்டுள்ளார். அவரும் இத்தனை நாளாக அதை நம்பியதாகச் சொல்கிறார். ஷீனா, இந்திராணியின் மகள் எனபதே அவருக்கு இப்போது தான் தெரிகிறதாம்!

கொலையில் தொடரும் மர்மங்கள்-குழப்பங்கள்:

இக்கொலையில் பல மர்மங்களும் குழப்பங்களும் நிறைந்துள்ளன.பல கேள்விகள் எழும்புகின்றன. அத்தனைக்கும் காவல்துறையினர் மேற்கொள்ளும் விசாரணைகள் தான் பதில் சொல்ல வேண்டும்.