
புத்ரா ஜெயா: பிகேஆர் கட்சித் தேர்தலில் துணைத் தலைவர் பதவிக்கானப் போட்டியில் நூருல் இசாவிடம் தோல்வி கண்ட பொருளாதாரத் துறை அமைச்சர் ரபிசி ரம்லி தன் அமைச்சுப் பொறுப்பிலிருந்து விலகியதைத் தொடர்ந்து பிகேஆர் தேசிய உதவித் தலைவர்தேர்தலில் தோல்வியடைந்த அமைச்சர் நிக் நாஸ்மியும் பதவி விலகினார்.
இயற்கை வளம் சுற்றுச் சூழல் அமைச்சராக நிக் நாஸ்மி பொறுப்பு வகித்து வந்தார். எனினும் தேர்தல் பிரச்சாரங்களின்போது ரபிசி ரம்லி போன்று பதவி விலகுவேன் என அவர் அறிவிக்கவில்லை.
ரபிசி, நிக் நாஸ்மி பதவி விலகலைத் தொடர்ந்து பிரதமர் அன்வாரின் அமைச்சரவை மாற்றியமைக்கப்படும் என்பது உறுதியாகியுள்ளது. சபா தேர்தலுக்கு முன்பாக அமைச்சரவை மாற்றம் நிகழலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.