Home Featured நாடு நஜிப்பை வெளியேற்றி புதிய அரசாங்கத்தை அமைப்போம் – தேமு எம்பிகளுடன் பேச எதிர்கட்சிகள் தயார்

நஜிப்பை வெளியேற்றி புதிய அரசாங்கத்தை அமைப்போம் – தேமு எம்பிகளுடன் பேச எதிர்கட்சிகள் தயார்

571
0
SHARE
Ad

Anwar-Najib-Election-300x202கோலாலம்பூர் – பிரதமர் நஜிப் துன் ரசாக்கின் அரசாங்கத்தைக் கவிழ்த்து புதிய பெரும்பான்மையை அமைக்க தாங்கள் உதவுவதாகவும், அதற்குப் பதிலாக முன்னாள் எதிர்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிமை சிறையில் இருந்து விடுதலை செய்ய வேண்டும் என்றும் எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள், தேசிய முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் கலந்து பேசி முடிவெடுக்க முன்வந்துள்ளனர்.

நேற்று ஜசெக, பிகேஆர் மற்றும் ஹராப்பான் பாரு ஆகிய கட்சிகள் நேற்று நாடாளுமன்றத்தில் சந்தித்த பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து இந்த மூன்று கட்சிகளும் இணைந்து இன்று வெளியிட்ட கூட்டறிக்கையில், “நஜிப் அப்துல் ரசாக்கின் அரசாங்கத்திற்குப் பதிலாக அரசியல் சீர்திருத்தங்களுடன் கூடிய புதிய பெரும்பான்மையுடன் புதிய அரசாங்கத்தை உருவாக்கும் நோக்கம் கொண்ட இந்த பரிந்துரை தொடர்பாக தேசிய முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர்களுடன், ஜசெக, பிகேஆர் மற்றும் கெராக்கான் ஹராப்பான் பாரு ஆகிய கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து பேசத் தயாராகி வருகின்றனர்.”

#TamilSchoolmychoice

“இந்த புதிய பெரும்பான்மையின் முதற்கட்டப் பணியே அன்வார் இப்ராகிம் மற்றும் மற்ற அரசியல் கைதிகளின் விடுவிப்பதாகும். அனைத்து அரசியல் அடக்குமுறைகளும் இரத்து செய்யப்படும்” என்று அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.