Home Featured நாடு தேசியத் தலைவரின் அணியில் இல்லாத 15 வேட்பாளர்கள்! யாரால் வெல்ல முடியும்?

தேசியத் தலைவரின் அணியில் இல்லாத 15 வேட்பாளர்கள்! யாரால் வெல்ல முடியும்?

443
0
SHARE
Ad

MIC-logoகோலாலம்பூர் – எதிர்வரும் நவம்பர் 6ஆம் தேதி நடைபெறவிருக்கும் மஇகா தேர்தலில், தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியம் தனக்கென ஓர் அணி அமைத்து 29 பேர் கொண்ட வேட்பாளர்களை ஆதரித்துப் பிரச்சாரம் செய்து வருகின்றார்.

இந்நிலையில், மொத்தமுள்ள  44 மத்திய செயலவை வேட்பாளர்களில் வேட்பாளர்களில்  15 பேர் தங்களின் சொந்தப் பிரச்சாரங்களை மேற்கொள்ள வேண்டிய இக்கட்டான நிலைமைக்கு ஆளாகியுள்ளனர்.

அந்த 15 பேர் கொண்ட பட்டியலில் ஒரு சிலர் வென்று வரக் கூடும் என்ற எதிர்பார்ப்பு நிலவினாலும், அதற்காக அவர்கள் கடுமையான பிரச்சாரத்தில் ஈடுபட்டு உழைக்க வேண்டும் என்பதுதான் மஇகாவில் உள்ள இன்றைய யதார்த்த நிலை.

#TamilSchoolmychoice

23 மத்திய செயலவையினரைத் தேர்ந்தெடுக்க வேண்டிய பேராளர்களுக்கு 29 வேட்பாளர்களை – அதுவும் கட்சியில் நீண்ட காலம் இருக்கின்ற – நன்கு அறிமுகமான வேட்பாளர்களை தேசியத் தலைவரே முன்னிறுத்தி தீவிரப் பிரச்சாரம் மேற்கொண்டு வருவதால் – இவர்களில் இருந்துதான் 23 பேரும் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்ற ஒரு கருத்து பரவலாக நிலவுகின்றது.

ஆனால், தேசியத் தலைவரின் அணியில் இல்லாத வேட்பாளர்களில் ஒரு சிலர் ஏற்கனவே கட்சியில் பதவி வகித்தவர்கள், பேராளர்களுக்கு நன்கு அறிமுகமானவர்கள் என்பதோடு, தன்னந்தனியாக தீவிரமான பிரச்சாரங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர் என்பதால், அவர்களில் ஓரிருவரும் தங்களின் பிரச்சார பலத்தால் வென்று வரக் கூடும் என்ற எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது.

தேசியத் தலைவரின் அணியில் இல்லாத அந்த 15 வேட்பாளர்கள் யார்? அவர்களின் வாக்குச் சீட்டு எண்ணுடன் பார்ப்போமா?

#  4 – ஆனந்தன் பண்டார் துன் ரசாக்
#  6 – என்.எஸ்.மணியம்
#  8  – நாகையா லங்காவி
# 12 – பி.ரவி (சுபாங்)
# 15 – டாக்டர் செல்வா
# 18 – டத்தோ ஆர்.ரமணன்
# 21 – டாக்டர் டி.இராமநாயகம்
# 24 – டத்தோ ரண்டீர் சிங்
# 25 – டத்தோ பஞ்சமூர்த்தி
# 26 – எஸ்.பி.பிரபா
# 27 – சி.எம்.கணேஷ், தஞ்சோங் காராங்
# 28 – ஏ.நாகராஜூ (சபா)
# 37 – சிப்பாங் ஆறுமுகம்
# 40 – இரமணி கிருஷ்ணன் (சிப்பாங்)
# 41 – டத்தோ ஆர்.கணேசன் (பேராக்)