கோலாலம்பூர் – அராப் வங்கி நிறுவனர் ஹுசைன் நஜாடி கொலை வழங்கில் மூளையாக செயல்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டவர் மீது நடத்தப்பட்ட விசாரணையின் முடிவில், அவர் குற்றம் செய்ததற்கான போதிய ஆதாரங்கள் இல்லை என்று நிரூபிக்கப்பட்டதால், நேற்று நீதிமன்றம் அவரை விடுதலை செய்தது.
லிம் யூன் சூ என்ற அந்த நபர் 8 நாட்கள் தடுப்புக் காவலுக்குப் பிறகு நேற்று விடுதலை செய்யப்பட்டதாக கோலாலம்பூர் குற்றப்புலனாய்வுத் துறைத் தலைவர் சைனுடின் அஹமட் உறுதிப்படுத்தியுள்ளார்.
“அவர் மீதான குற்றத்தை நிரூபிக்க போதிய ஆதாரங்கள் இல்லை, அதனால் அவர் விடுவிக்கப்பட்டார்” என்று சைனுடின் தெரிவித்துள்ளார்.
கடந்த அக்டோபர் 15-ம் தேதி சீனாவில் இருந்து மலேசியா திரும்பிய போது லிம்மை காவல்துறை கைது செய்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், அவர் மீதான வழக்கு முடிவுக்கு வந்துவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.