Home Featured நாடு நஜாடி கொலை வழக்கில் கருத்துத் தெரிவித்த அமைச்சரைச் சாடினார் பாஸ்கல் நஜாடி!

நஜாடி கொலை வழக்கில் கருத்துத் தெரிவித்த அமைச்சரைச் சாடினார் பாஸ்கல் நஜாடி!

681
0
SHARE
Ad

Pascal Najadiகோலாலம்பூர் – நஜாடி கொலைக்கும், பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கின் ‘நன்கொடை’ விவகாரத்திற்கும் எந்த ஒரு தொடர்பும் இல்லை என்று அமைச்சர் சாலே கெருவாக் தெரிவித்துள்ள கருத்துக்கு நஜாடியின் மகன் பாஸ்கல் நஜாடி கண்டனம் தெரிவித்துள்ளார்.

சாலே எப்படி அப்படி ஒரு கருத்தைக் கூறலாம்? என்றும் பாஸ்கல் கேள்வி எழுப்பியுள்ளார்.

“மலேசிய வரலாற்றில் நடந்துள்ள மிக முக்கியப் புள்ளிகளின் கொலைகளை விசாரணை செய்ய வேண்டாம் என சட்டத்துறையும், காவல்துறையும் முடிவெடுத்துவிட்டன என்று கூறப்படுவதை வேண்டுமென்றே மறுக்கிறார் சாலே”

#TamilSchoolmychoice

“அதேவேளையில், இந்தக் கொலைகளில் பிரதமருக்கோ அல்லது 1எம்டிபி விவகாரத்திற்கோ எந்த ஒரு தொடர்பும் இல்லை என்று ஊடகங்களிடம் சாலே கூறியுள்ளது எங்களுக்கு மிகுந்த ஆச்சர்யம் அளிக்கின்றது”

“எங்களை விட அவருக்கு அதிகம் தெரியும் போல் தெரிகின்றது. அவரது துணிச்சலான அறிக்கையை பார்க்கும் போது அவரிடமிருந்து உண்மைகளை அறிந்து கொண்டு அதை ஆவணப்படுத்த விரும்புகின்றோம்” என்று பாஸ்கல் நேற்று நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளதாக மலேசியாகினி இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவின் ஏபிசி செய்தி நிறுவனத்தின் ‘போர் கார்னர்ஸ்’ நிகழ்ச்சி கடந்த திங்கட்கிழமை முதல் நஜிப் பற்றிய பரபரப்பான தகவல்களை வெளியிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.