Home One Line P1 சபா முன்னாள் முதல்வர் சாலே கெருவாக் மீண்டும் அம்னோவில் இணைவது உறுதி

சபா முன்னாள் முதல்வர் சாலே கெருவாக் மீண்டும் அம்னோவில் இணைவது உறுதி

473
0
SHARE
Ad

கோலாலம்பூர்: அம்னோ முன்னாள் பொருளாளர் டத்தோஸ்ரீ டாக்டர் சாலே கெருவாக், அம்னோவில் மீண்டும் சேர விண்ணப்பித்திருப்பதை உறுதிப்படுத்தினார்.

இந்த விண்ணப்பத்தை மே 26 அன்று மாநில அம்னோ தொடர்புத் தலைவர் டத்தோஸ்ரீ புங் மொக்தார் ராடினிடம் அளித்ததாக அவர் கூறினார்.

சபாவின் முன்னாள் முதல்வரான சாலே, கடந்த 2018-ஆம் ஆண்டு அம்னோவை விட்டு வெளியேறிய தமது முந்தைய முடிவை மறுஆய்வு செய்த பின்னர், இந்த முடிவை எடுத்ததாகக் கூறினார்.

#TamilSchoolmychoice

தற்போது தமது விண்ணப்பத்தை பரிசீலிக்க அம்னோவுக்கு, குறிப்பாக அதன் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் சாஹிட் ஹமிடி, உச்சமன்றக் குழு மற்றும் சபா மாநிலத் தலைவர் டத்தோஸ்ரீ புங் மொக்தார் ராடினிடம் சமர்ப்பிப்பதாக அவர் கூறினார்.

” மலேசியாவைக் கட்டியெழுப்புவதற்கான போராட்டத்தைப் பின்பற்றுவதில் எனது முழு முயற்சியையும் ஆற்றலையும் அம்னோவுடன் பங்களிக்க விரும்புகிறேன்.” என்று சாலே கெருவாக் தனது வலைப்பதிவில் கூறினார்.

நேற்று செவ்வாய்க்கிழமை, அம்னோவில் மீண்டும் சேர சல்லேவின் விண்ணப்பத்தைப் பெற்றதாகவும், விண்ணப்பம் பரிசீலிக்கப்படுவதாகவும் புங் மொக்தார் நேற்று அறிவித்திருந்தார்.

முன்னதாக, பிகேஆரின் உள் கொந்தளிப்பு உள்ளிட்ட இன்றைய அரசியல் நிலப்பரப்பை ஆராய்ந்து பரிசீலித்த பின்னர் ஏப்ரல் மாதத்தில் பிகேஆரில் சேருவதற்கான விண்ணப்பத்தை இரத்து செய்ததாக சாலே அறிவித்திருந்தார்.

சாலேவும், அவரும் பெரும்பான்மையான சபா அம்னோ தலைவர்களும் 2018 டிசம்பரில் கட்சியை விட்டு வெளியேறியதை அடுத்து, அக்டோபரில் பிகேஆரில் இணைய விண்ணப்பித்தனர்.

கடந்த 2019-ஆம் ஆண்டில் சாலே பிகேஆரில் இணைய இணையம் வழியான விண்ணப்பத்தை பிகேஆர் தகவல் தொடர்புத் தலைவர் பாமி பட்சில் கூறியிருந்தார்.

எனினும் அந்த விண்ணப்பத்தை ஏற்றுக் கொள்வதா இல்லையா என்பதை பிகேஆர் கட்சியின் அரசியல் குழுக் கூட்டம் தனது அடுத்த கூட்டத்தில் விவாதித்து முடிவெடுக்கும் என்றும் பாமி பட்சில் தெரிவித்திருந்தார்.

சபாவிலுள்ள கோத்தா பெலுட் தொகுதியில் உறுப்பினராக இணைய சாலே விண்ணப்பித்திருந்தார்.

சபா அம்னோவின் முக்கியத் தலைவர்களில் ஒருவராகத் திகழ்ந்த சாலே, நஜிப் ஆட்சிக் காலத்தில் 1எம்டிபி விவகாரத்தில் நஜிப்பை தீவிரமாக ஆதரித்தவராவார்.

Comments