Home One Line P1 அம்னோவின் முன்னாள் அமைச்சர் சாலே சைட் கெருவாக் பிகேஆர் கட்சியில் இணைய முடிவு

அம்னோவின் முன்னாள் அமைச்சர் சாலே சைட் கெருவாக் பிகேஆர் கட்சியில் இணைய முடிவு

779
0
SHARE
Ad

கோத்தா கினபாலு – அம்னோவைச் சேர்ந்த முன்னாள் தொடர்பு, பல்ஊடக அமைச்சரான சாலே சைட் கெருவாக் பிகேஆர் கட்சியில் இணைய தனது விண்ணப்பத்தைச் சமர்ப்பித்துள்ளார்.

பிகேஆர் கட்சியின் தொடர்புத் துறை இயக்குநரும் லெம்பா பந்தாய் நாடாளுமன்ற உறுப்பினருமான பாமி பட்சில் இந்தத் தகவலை நேற்று சனிக்கிழமை வெளியிட்டார்.

இணையம் வழியான விண்ணப்பத்தை சாலே சைட் கெருவாக் சமர்ப்பித்துள்ளார் என்றும் பாமி பட்சில் கூறினார்.

#TamilSchoolmychoice

எனினும் அந்த விண்ணப்பத்தை ஏற்றுக் கொள்வதா இல்லையா என்பதை பிகேஆர் கட்சியின் அரசியல் குழுக் கூட்டம் தனது அடுத்த கூட்டத்தில் விவாதித்து முடிவெடுக்கும் என்றும் பாமி பட்சில் தெரிவித்தார்.

பிகேஆர் கட்சியின் அரசியல் குழு முடிவெடுக்கும் என பாமி கூறினாலும், பிகேஆர் கட்சியின் இணையம் வழியான உறுப்பினர் பட்டியலில் சாலேயின் விண்ணப்பம் ‘அங்கீகரிக்கப்பட்டது’ என்ற குறியீட்டைக் கொண்டிருக்கிறது.

சபாவிலுள்ள கோத்தா பெலுட் தொகுதியில் உறுப்பினராக இணைய சாலே விண்ணப்பம் செய்துள்ளார்.

சபா அம்னோவின் முக்கியத் தலைவர்களில் ஒருவராகத் திகழ்ந்த சாலே, நஜிப் ஆட்சிக் காலத்தில் 1எம்டிபி விவகாரத்தில் நஜிப்பை தீவிரமாக ஆதரித்தவராவார்.

சபா அம்னோவிலிருந்து பிரிந்த பல தலைவர்கள் பெர்சாத்து கட்சியில் இணைந்துள்ளனர். ஆனால் சாலே மற்றும் முன்னாள் நாடாளுமன்ற மக்களவைத் தலைவர் பண்டிகார் அமின் மூலியா இருவரும் இதுவரையில் எந்தக் கட்சியிலும் சேராமல் இருந்தனர். அவர்கள் இருவரும் இணைந்து சபா பஜாவ் இயக்கம் என்ற பெயரில் அரசு சாரா இயக்கம் ஒன்றைத் தொடங்கியுள்ளனர்.

சாலேயைத் தொடர்ந்து பண்டிகார் அமினும் பிகேஆர் கட்சியில் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.