Home One Line P2 பிக்பாஸ் 3 : நால்வரில் யாரும் வெளியேற்றப்படவில்லை

பிக்பாஸ் 3 : நால்வரில் யாரும் வெளியேற்றப்படவில்லை

1154
0
SHARE
Ad

சென்னை – ஸ்டார் விஜய் தொலைக்காட்சியின் ‘பிக்பாஸ் 3’ தொடரில், நேற்று சனிக்கிழமை ஒளியேறிய பகுதியில் இறுதிச் சுற்றுக்குத் தேர்வாகியிருக்கும் நால்வரில் யாரும் வெளியேற்றப்படவில்லை.

வழக்கமாக சனிக்கிழமை நிகழ்ச்சியில் யாராவது ஒருவர் வெளியேற்றுப் படலத்திலிருந்து காப்பாற்றப்படுவது வழக்கம். இந்த முறை இறுதிச் சுற்றுக்கு சாண்டி, முகேன், ஷெரின், லோஸ்லியா என நால்வர் தேர்வாகியிருக்கின்றனர்.

வெள்ளிக்கிழமையன்று அவர்களுக்கிடையில் நடந்த சம்பவங்களும், பின்னர் பிக்பாசிடம் தங்களின் பிக்பாஸ் இல்ல அனுபவங்களையும் அந்த நால்வரும் பகிர்ந்து கொண்டதும் ஒளிபரப்பப்பட்டது.

#TamilSchoolmychoice

நிகழ்ச்சியின் இறுதியில் பேசிய கமல் வெற்றியாளர் ஞாயிற்றுக்கிழமை (இன்று அக்டோபர் 6) அறிவிக்கப்படுவார் என்பதால் இந்த மகிழ்ச்சியான தருணங்களோடு அந்த நால்வரையும் அப்படியே விட்டு விடுவோம் என்று கூறி, நிகழ்ச்சியை முடித்துக் கொண்டார்

வெற்றியாளரைத் தேர்வு செய்யும் பிக்பாஸ்-3 நிகழ்ச்சியின் இறுதிப் பகுதி இன்று மாலை இந்திய நேரப்படி மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாகும்.

பின்னர் இன்றிரவே அஸ்ட்ரோ அலைவரிசை 224-இல் பிக்பாஸ் 3 இறுதிச் சுற்று மறு ஒளிபரப்பாகும்.