Home One Line P2 பிக்பாஸ் 3 : லோஸ்லியாவை சுருதி கமல்ஹாசன் வெளியே அழைத்து வந்தார்

பிக்பாஸ் 3 : லோஸ்லியாவை சுருதி கமல்ஹாசன் வெளியே அழைத்து வந்தார்

1474
0
SHARE
Ad

சென்னை – (மலேசிய நேரம் இரவு 10.00 மணி நிலவரம்) ஸ்டார் விஜய் தொலைக்காட்சியின் ‘பிக்பாஸ் 3’ தொடர் இன்று ஞாயிற்றுக்கிழமையோடு நிறைவு காணவிருப்பதைத் தொடர்ந்து 5 மில்லியன் ரூபாய் பெறும் முதல் நிலை வெற்றியாளர் யார் என்ற ஆர்வமும் பரபரப்பும் நிலவுகிறது.

இறுதிச் சுற்றுக்கு வந்த 4 போட்டியாளர்களில் முதலில் ஷெரின் வெளியேற்றப்பட்டார். அவரைத் தொடர்ந்து லோஸ்லியா வெளியேற்றப்பட்டார். கமல்ஹாசனின் மகள் சிறப்பு விருந்தினராக நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிக்பாஸ் இல்லத்தினுள் சென்று லோஸ்லியாவை வெளியே அழைத்து வந்தார்.

இதனைத் தொடர்ந்து சாண்டி மற்றும் மலேசியாவின் முகேன் இருவரில் ஒருவர் பிக்பாஸ் வெற்றியாளராக அறிவிக்கப்படுவது உறுதியாகியிருக்கிறது.

#TamilSchoolmychoice

-செல்லியல் தொகுப்பு