Home One Line P2 பிக்பாஸ் புகழ் லோஸ்லியாவின் தந்தை மரியநேசன் காலமானார்

பிக்பாஸ் புகழ் லோஸ்லியாவின் தந்தை மரியநேசன் காலமானார்

720
0
SHARE
Ad

தொரண்டோ : கடந்த ஆண்டு விஜய் ஸ்டார் தொலைக்காட்சியில் ஒளியேறிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெற்று உலகப் புகழை அடைந்தார் லோஸ்லியா என்ற ஈழத்துப் பெண். அவரது தந்தையார் மரியநேசன் நேற்று ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 15) கனடாவில் காலமானார்.

இதைத் தொடர்ந்து லோஸ்லியாவுக்கு தமிழ்த் திரையுலகில் இருந்து இரங்கல் செய்திகள் குவிந்து வருகின்றன. குறிப்பாக லோஸ்லியாவுடன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெற்றதோடு அவருக்கு இன்னொரு தந்தை என்று கூறுமளவுக்கு நெருக்கமானவர் இயக்குநர் சேரன். அவரும் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு பிக்பாஸ் நிகழ்ச்சியின்போது நேரடியாக ஒரு நிகழ்ச்சியில் தோன்றினார் மரியநேசன். அப்போது அவருக்கும் அவரது மகள் லோஸ்லியாவுக்கும் இடையில் நடந்த உரையாடல்களும் சம்பவங்களும் அனைவரையும் கவர்ந்தன. அந்த சம்பவங்கள் நடைபெற்று ஓராண்டுக்குள் அவரின் துர்மரணம் நேர்ந்துள்ளது பிக்பாஸ் இரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

#TamilSchoolmychoice

மரியநேசன் கனடாவில் காலமானார். அவரது நல்லுடலை இலங்கைக்குக் கொண்டுவரும் முயற்சியில் அவரது குடும்பத்தினர் ஈடுபட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.