Home One Line P1 ஐ-சினார்: கணக்கு 1- லிருந்து 10 விழுக்காடு திரும்பப் பெறலாம்

ஐ-சினார்: கணக்கு 1- லிருந்து 10 விழுக்காடு திரும்பப் பெறலாம்

613
0
SHARE
Ad

கோலாலம்பூர்: ஐ-சினார் திட்டம் தொடர்பான கூடுதல் புதுப்பிப்புகளுடன், ஊழியர் சேமநிதி வாரியம் (ஈபிஎப்) ஓர் அறிக்கையை வெளியிட்டது. இது கொவிட் -19 தொற்றால் பாதிக்கப்பட்ட பங்களிப்பாளர்களுக்கான கணக்கு 1- லிருந்து பணத்தை திரும்பப் பெறும் திட்டமாகும்.

ஈபிஎப் இந்த திட்டம் இரண்டு மில்லியன் பங்களிப்பாளர்களுக்கு பயனளிக்கும் என்று கூறியுள்ளது. சுமார் 14 பில்லியன் ரிங்கிட் இதன் மூலம் வெளியாகும் என்று அது மதிப்பிடப்பட்டுள்ளது.

90,000 ரிங்கிட் மற்றும் அதற்கும் கீழ்பட்ட நிதியை, கணக்கு 1- இல் வைத்திருக்கும் பங்களிப்பாளர்களுக்கு, 9,000 ரிங்கிட் வரை தொகையை அணுகலாம். ஆரம்பத்தில் 4,000 ரிங்கிட் வரை திரும்பப் பெறலாம்.

#TamilSchoolmychoice

கணக்கு 1- இல் 90,000 ரிங்கிட் மற்றும் அதற்கு மேற்பட்ட இருப்பு உள்ள பங்களிப்பாளர்களுக்கு, திரும்பப் பெறக்கூடிய அதிகபட்ச தொகை 60,000 ரிங்கிட்டாகும். ஆரம்பத்தில் அவர்கள் 10,000 ரிங்கிட் வரை பெறலாம்.

“பொதுவாக, தகுதியான உறுப்பினர்கள் தங்கள் சேமிப்புத் தொகையில் 10 விழுக்காட்டை கணக்கு 1- லிருந்து அணுகலாம். இது குறைந்தபட்ச 100 ரிங்கிட் பாக்கி பணம் கணக்கில் இருப்பதை விதியாகக் கொண்டுள்ளது,” என்று ஈபிஎப் கூறியது.

திரும்பப் பெறுதல் ஆறு மாதங்கள் வரை அவ்வப்போது செய்யப்படும் என்று ஈபிஎப் தெரிவித்துள்ளது.

வேலை இழந்தவர்கள் உட்பட, ஊதியம் பெறாத விடுப்பு அல்லது வருமான ஆதாரங்கள் இல்லாதவர்கள், இந்த டிசம்பர் முதல் விண்ணப்பிக்கலாம். ஜனவரி 2021 முதல் முதல் பணம் செலுத்தப்படும்.

இருப்பினும், ஐ-லெஸ்தாரி திட்டத்தைப் போலன்றி, ஐ-சினார் விண்ணப்பதாரர்கள் எதிர்காலத்தில் பங்களிப்புகளின் மூலம் திரும்பப் பெறப்பட்ட பணத்தை செலுத்த வேண்டும்.

ஐ-சினார் மார்ச் மாதத்தில் தொடங்கப்பட்ட ஐ-லெஸ்தாரியின் தொடர்ச்சியாகும், மேலும் இரண்டு திட்டங்களும் ஒரே நேரத்தில் இயங்கும் என்று நிதியமைச்சர் தெங்கு ஜாப்ருல் அப்துல் அசிஸ் ஒரு தனி அறிக்கையில் கூறினார்.