Home நாடு ஊழியர் சேமநிதி வாரியம் 6.3% இலாப ஈவு அறிவிப்பு

ஊழியர் சேமநிதி வாரியம் 6.3% இலாப ஈவு அறிவிப்பு

60
0
SHARE
Ad

ஷா ஆலாம்: மலேசியாவின் ஊழியர் சேமநிதி வாரியம் (Employees Provident Fund –  EPF) தனது சேமிப்புதாரர்களுக்கு 2024-ஆம் ஆண்டுக்கான இலாப ஈவாக 6.3% விழுக்காட்டை அறிவித்துள்ளது.

இந்த இலாப ஈவுத் தொகையின் மொத்த மதிப்பு 63.05 பில்லியன் ரிங்கிட்டாகும்.

ஊழியர் சேமநிதி வாரியத்தில் இஸ்லாமிய முறைப்படி ஷாரியா சேமிப்பை வைத்திருப்பவர்களுக்கும் அதே 6.3 விழுக்காட்டு இலாப ஈவு வழங்கப்படுகிறது. இந்த இலாப ஈவுத் தொகையின் மொத்த மதிப்பு 10.19 பில்லியன் ரிங்கிட்டாகும்.

#TamilSchoolmychoice

ஆக, 2024-ஆம் ஆண்டுக்கான மொத்த இலாப ஈவுத் தொகையின் மதிப்பு 73.24 பில்லியன் ரிங்கிட்டாகும்.

2024-ஆம் ஆண்டுக்கான இலாப ஈவு விழுக்காட்டு கடந்த 2023-ஆம் ஆண்டை விடக் கூடுதலாகும். 2023-இல் சேமிப்புதாரர்களுக்கு 5.5 விழுக்காடு இலாப ஈவும் ஷாரியா சேமிப்புதாரர்களுக்கு 5.4 விழுக்காடு இலாப ஈவும் வழங்கப்பட்டது.