Home One Line P2 ஊழியர் சேமநிதி வாரியம் – தேசிய மின்சார வாரியம் – இரண்டுக்கும் புதிய நிர்வாகிகள்

ஊழியர் சேமநிதி வாரியம் – தேசிய மின்சார வாரியம் – இரண்டுக்கும் புதிய நிர்வாகிகள்

679
0
SHARE
Ad

புத்ரா ஜெயா : நாட்டின் மிகப் பெரிய அரசாங்க நிதி அமைப்புகளில் ஒன்றான இபிஎப் எனப்படும் ஊழியர் சேமநிதி வாரியத்தின் புதிய தலைமைச் செயல் அதிகாரியாக டத்தோஸ்ரீ அமிர் ஹம்சா அசிசான் (படம்) நியமிக்கப்பட்டுள்ளார்.

அவரின் சிறந்த தகுதிகள் காரணமாகவே அவர் அந்தப் பொறுப்புக்கு நியமிக்கப்பட்டிருக்கிறார் என நிதியமைச்சர் தெங்கு சாப்ருல் தெங்கு அப்துல் அசிஸ் தெரிவித்தார்.

நடப்பு தலைமைச் செயலாளராக இருக்கும் துங்கு அலிசாக்ரி அலியாசுக்குப் பதிலாக அமிர் ஹம்சா அசிசான் நியமிக்கப்பட்டிருக்கிறார்.

#TamilSchoolmychoice

மார்ச் 1-ஆம் தேதி முதல் பதவியேற்கவிருக்கும் அமிர் ஹம்சா அசிசான் இதற்கு முன்னர் தேசிய மின்சார வாரியத்தின் தலைவராகவும், தலைமைச் செயல் அதிகாரியாகவும் பணியாற்றி வந்தார்.

அமிர் ஹம்சா அசிசான் ஷெல் குழுமம் உள்ளிட்ட பல்வேறு அனைத்துலக நிறுவனங்களில் முக்கியப் பொறுப்புகளை வகித்திருக்கிறார்.

அமிர் ஹம்சா அசிசான், ஊழியர் சேமநிதி வாரியத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக பொறுப்பேற்றதைத் தொடர்ந்து புதிய தலைமைச் செயல் அதிகாரியை தேசிய மின்சார வாரியம் பெற்றிருக்கிறது.

தேசிய மின்சார வாரியத்திற்கு புதிய தலைமைச் செயல் அதிகாரி

டிஎன்பி எனப்படும் தேசிய மின்சார வாரியத்தின் புதிய தலைவர், தலைமைச் செயல் அதிகாரியாக டத்தோ பஹாரின் டின் நியமிக்கப்பட்டுள்ளார்.

தேசிய மின்சார வாரியத்தின் விநியோக அதிகாரியாக அவர் தற்போது பணியாற்றி வருகிறார்.

பல ஆண்டுகாலமாக தேசிய மின்சார வாரியத்தில் பணியாற்றி வரும் பஹாரின் பசுமைத் தொழில்நுட்பம், எரிசக்தி, நீர் அமைச்சிலும் பணியாற்றியிருக்கிறார்.