Home One Line P1 கொவிட்19: ஐவர் மரணம்- 1,120 புதிய சம்பவங்கள் பதிவு

கொவிட்19: ஐவர் மரணம்- 1,120 புதிய சம்பவங்கள் பதிவு

435
0
SHARE
Ad

கோலாலம்பூர்: இன்று செவ்வாய்க்கிழமை, கடந்த 24 மணி நேரத்தில் 1,120 புதிய கொவிட்-19 தொற்று சம்பவங்கள் பதிவாகியிருக்கின்றன. இவற்றில் உள்ளூர் தொற்றுகள் 1,191 ஆகும். வெளிநாட்டிலிருந்து 19 தொற்றுகள் பீடிக்கப்பட்டிருக்கிறன.

தொடர்ந்து ஐந்தாவது நாளாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொற்று சம்பவங்கள் நாட்டில் பதிவாகியிருக்கின்றன.

இதனைத் தொடர்ந்து மொத்தமாக நாட்டில் இதுவரையில் 49,730 சம்பவங்கள் பதிவாகி உள்ளன.

#TamilSchoolmychoice

கிள்ளான் பள்ளத்தாக்கில் மட்டும் 500-க்கும் மேற்பட்ட தொற்றுச் சம்பவங்கள் பதிவாகி உள்ளன. சபாவில் மட்டும் 499 தொற்றுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இன்று 1,018 பேர் குணமடைந்து மருத்துவமனைகளிலிருந்து வெளியேறி உள்ளனர். இதனைத் தொடர்ந்து, மொத்தமாக மருத்துவமனைகளில் இருந்து சிகிச்சை பெற்று வெளியேறியவர்களின் எண்ணிக்கை 36,624 ஆக உயர்ந்துள்ளது.

இன்னமும், 12,788 பேர் தொற்றுக் காரணமாக மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். அவர்களில் 105 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 40 பேருக்கு சுவாசக் கருவி உதவியோடு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இன்று 5 பேர் மரணமுற்ற நிலையில், மரண எண்ணிக்கை 318-ஆக உயர்ந்துள்ளது.