Home One Line P1 நகைகளுக்காக அரை பில்லியனுக்கு மேல் ரோஸ்மா செலவு செய்தார்!

நகைகளுக்காக அரை பில்லியனுக்கு மேல் ரோஸ்மா செலவு செய்தார்!

820
0
SHARE
Ad

கோலாலம்பூர்: அல் ஜசீராவின் புதிய சிறப்பு ஆவணப்படமான ‘ஜோ லோ: ஹன்ட் பார் எ புஜிடிவ்’ – மலேசிய அரசாங்கத்துடன் ஓர் ஒப்பந்தத்தை மேற்கொள்வதற்கும், பல பில்லியன் டாலர் 1எம்டிபி நிதி ஊழல் தொடர்பாக சிறைக்கு செல்வதைத் தவிர்ப்பதற்கும் ஜோ லோவின் முயற்சிகள் குறித்து வெளிப்படுத்தி உள்ளது.

டாக்டர் மகாதிர் முகமட்டின் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நம்பிக்கைக் கூட்டணி நிர்வாகத்துடன் ஓர் ஒப்பந்தத்தை மேற்கொள்ள முயன்றபோது, ​​2018- ஆண்டு மே முதல் நவம்பர் வரை மலேசிய அதிகாரிகளுடனான உரையாடல்களில் இருந்த லோ ஜோவின் புதிய தொலைபேசி பதிவுகள் இந்த ஆவணப்படத்தில் இடம்பெற்றிருந்தன.

“எந்தவொரு முடிவையும் எடுக்க எனக்கு அதிகாரம் இல்லை. இது மிகவும் அறியப்பட்ட உண்மை. அனைத்து ஒப்பந்தங்களும் நிதி அமைச்சரால் (நஜிப் ரசாக்) அங்கீகரிக்கப்பட வேண்டும்,” என்று ஜோ லோ கூறினார்.

#TamilSchoolmychoice

சொத்துக்கள், ஒரு தனியார் ஜெட், கப்பல், மற்றும் பகட்டான செயல்பாடுகளுக்கு ஏராளமான பணத்தை செலவழித்த போதிலும், ஜோ லோ அவர் எந்த தவறும் செய்யவில்லை என்று கூறினார்.

“என் மீது எந்தத் தவறும் இல்லை என்று நான் நம்புகிறேன். இவை அனைத்தும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ கடன்களே. நேரம் வந்துவிட்டது என்று நான் நினைக்கிறேன். இந்த சொத்துக்களை திருப்பி அனுப்புவதற்கு நாங்கள் உதவ விரும்புகிறோம். எந்தவொரு வழக்கும் தொடரப்படாமல் சுதந்திரமாக இருக்க விரும்புகிறோம், “என்று அவர் கூறினார்.

“1எம்டிபி தொடர்பான பிரச்சனைகளை தீர்க்க அரசாங்கத்தின் மாற்றம் ஒரு உண்மையான வாய்ப்பை அளிக்கிறது என்று நான் நம்புகிறேன். நான் அதை அடைய உறுதிபூண்டுள்ளேன்.” என்று அவர் கூறினார்.

நஜிப்பின் மனைவி ரோஸ்மா மன்சோர், நகைகளுக்காக 1 பில்லியன் டாலர்களுக்கு மேல், அரை பில்லியன் டாலர்களுக்கு மேல் செலவிட்டார் என்று ஜோ லோ கூறினார்.

ரோஸ்மாவுக்காக ஜோ லோ 27 மில்லியன் அமெரிக்க டாலர் இளஞ்சிவப்பு வைரத்தை வாங்கியதை அமெரிக்க நீதித்துறை ஆவணங்கள் விரிவாகக் கொண்டிருந்தன.