Home One Line P1 குற்றச் செயல்கள் 23 விழுக்காடு குறைந்துள்ளன!

குற்றச் செயல்கள் 23 விழுக்காடு குறைந்துள்ளன!

550
0
SHARE
Ad

கோலாலம்பூர்: கொவிட் -19 தொற்றுநோயின் விளைவாக மலேசியாவில் குற்றவியல் வழக்குகள் அதிகரித்து வருகின்றன எனும் குற்றச்சாட்டுகளை காவல் துறை நிராகரித்துள்ளது. இந்த ஆண்டு ஜனவரி 1 முதல் நவம்பர் 15 வரையிலான காலகட்டத்தில் புள்ளிவிவரங்களிபடி குற்றச் செயல்கள் 23 விழுக்காடு குறைந்துள்ளதாக அது கூறியது.

16,719 குற்றவியல் வழக்குகள் குறைந்துள்ளதாக காவல் துறை தெரிவித்துள்ளது. இது கடந்த ஆண்டின் இதே காலத்தில் 72,836 குற்றவியல் வழக்குகள் பதிவானதை அது குறிப்பிட்டது.

இதனால் மலேசியாவில் குற்றவியல் வழக்குகள் தொடர்பான குற்றச்சாட்டுகளை மறுப்பதாக புக்கிட் அமான் குற்றவியல் புலனாய்வுத் துறை இயக்குனர் டத்தோ ஹுசிர் முகமட் கூறினார்.

#TamilSchoolmychoice

இந்த தொற்றுநோயின் தாக்கத்தால், பல வேலை இழப்புகளுடன் குற்றவியல் வழக்குகளில் அதிகரிப்பு குறித்து சமூகத்தில் கவலைகள் இருப்பதை காவல் துறை அறிந்திருப்பதாக அவர் கூறினார்.

இந்நாட்டில் வழிப்பறி சம்பவங்கள் போக்கு குறித்த செய்திகள் சமூக ஊடகங்களிலும் பரவி வருவதால் பொதுமக்கள் வருத்தப்படுகிறார்கள்.

“வழிப்பறி சம்பவங்கள் சம்பந்தமாக, இந்த ஆண்டு ஜனவரி 1 முதல் நவம்பர் 15 வரையிலான காலகட்டத்தில் மொத்தம் 1,160 வழக்குகள் பதிவாகியுள்ளன. இது 2019- ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடும்போது 2,216 வழக்குகள் ஆகும்.

“கடந்த ஆண்டு ஜனவரி 1 முதல் நவம்பர் 15 வரையிலான காலகட்டத்தில் வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்டதாக மொத்தம் 893 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர், இந்த ஆண்டு இதே காலத்தில் 527 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளர்,” என்று அவர் விளக்கினார்.

புள்ளிவிவரங்கள் வழக்குகளில் குறைவைக் காட்டினாலும், பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்கு பராமரிக்கப்படுவதை உறுதி செய்வதற்கு இன்னும் விரிவான நடவடிக்கை எடுப்பதன் மூலம் குற்றச்செயல்கள் தொடர்ந்து குறைந்து வருவதை காவல் துறை எப்போதும் உறுதி செய்யும் என்று ஹுசிர் கூறினார்.

இதற்கிடையில், அதிகாரிகளிடமிருந்து உண்மையான, ஆதரிக்கப்படாத குற்றவியல் சம்பவங்கள் அல்லது குற்றவியல் வழக்குகள் தொடர்பான தவறான செய்திகள், புகைப்படங்களை தன்னிச்சையாக தயாரிக்கவோ, பகிரவோ அல்லது அனுப்பவோ கூடாது என்று பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.