Home கலை உலகம் பிக் பாஸ் 5 : முதல் ஒளிபரப்பு கண்டு இரசிகர்களை ஈர்த்து வருகிறது

பிக் பாஸ் 5 : முதல் ஒளிபரப்பு கண்டு இரசிகர்களை ஈர்த்து வருகிறது

795
0
SHARE
Ad

பிக் பாஸ் சீசன் 5, அக்டோபர் 4, ஆஸ்ட்ரோவில் முதல் ஒளிபரப்புக் காண்கிறது

கோலாலம்பூர் –  ஸ்டார் விஜய் எச்டியில் (அலைவரிசை 221) முதல் ஒளிபரப்புக் காணும் – மிகவும் எதிர்ப்பார்க்கப்பட்ட – புகழ் பெற்றத் தமிழ் ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக் பாஸ் சீசன் 5-ஐ ஆஸ்ட்ரோ வாடிக்கையாளர்கள் தற்போது கண்டு களித்து வருகின்றனர். கடந்த அக்டோபர் 4 முதல் இந்த நிகழ்ச்சி ஒளியேறி வருகிறது.

தினமும் தொடர்ச்சியாக பிக் பாஸ் 5 ஒளிபரப்பாகி வருகிறது.

#TamilSchoolmychoice

பிரபலமான இந்திய நடிகர், கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் இந்நிகழ்ச்சியின் இவ்வருடக் கருப்பொருள் ‘எதிர்பாராததை எதிர் பாருங்கள்!’ என்பதாகும்.

இரசிகர்களுக்கு மிகவும் உற்சாகமானத் தருணங்களை வழங்க பிக் பாஸ் சீசன் 5 உறுதியளிக்கிறது. நிரூப், சிபி, தாமரை செல்வி, இக்கி பெர்ரி, அக்‌ஷரா, ஸ்ருதி, இமான் அண்ணாச்சி, வருண், சின்ன பொண்ணு, பவ்னி, அபினய், பிரியங்கா, நமீதா, அபிஷேக், மதுமிதா, ராஜு, இசை வாணி மற்றும் மலேசியப் போட்டியாளர், நதியா சங் உட்பட 18 போட்டியாளர்களுடன் சுமார் 106 நாட்களுக்கு இரசிகர்களை நடிகர் கமல்ஹாசன் கவர்வார்.

பிக் பாஸ் சீசன் 5-இன் புதிய அத்தியாயங்களைத் தினமும் அதிகாலை 1.35 மணிக்கு, ஸ்டார் விஜய் எச்டியில் (அலைவரிசை 221) கண்டுக் களியுங்கள். முதல் அத்தியாயத்தின் மறு ஒளிபரப்பை அக்டோபர் 4 அன்று, மாலை 6 மணிக்கு இரசிகர்கள் கண்டு மகிழலாம். வார நாட்களில் இரவு 10 மணிக்கும் வார இறுதி நாட்களில் இரவு 9.30 மணிக்கும் புதிய அத்தியாயங்களின் மறு ஒளிபரப்பை இரசிகர்கள் ஸ்டார் விஜய் எச்டியில் (அலைவரிசை 221), அக்டோபர் 5 முதல் கண்டுக் களிக்கலாம். ஆஸ்ட்ரோ கோ மற்றும் ஆன் டிமாண்ட் ஆகியவற்றில் எப்போது வேண்டுமானாலும் இரசிகர்கள் பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழலாம்.


Join us on our Telegram channel for more news and latest updates: https://t.me/selliyal

மேலும் கூடுதலான அண்மையச் செய்திகளைத் தெரிந்து கொள்ள எங்களின் Telegram (டெலிகிராம்) குறுஞ்செயலி இணைப்பில் இணைந்திருங்கள்: https://t.me/selliyal