Home One Line P2 பிக்பாஸ் 3 : நால்வரில் முதலாவதாக ஷெரின் வெளியேறினார்

பிக்பாஸ் 3 : நால்வரில் முதலாவதாக ஷெரின் வெளியேறினார்

1422
0
SHARE
Ad

சென்னை – (மலேசிய நேரம் இரவு 10.00 மணி நிலவரம்) ஸ்டார் விஜய் தொலைக்காட்சியின் ‘பிக்பாஸ் 3’ தொடர் இன்று ஞாயிற்றுக்கிழமையோடு நிறைவு காணவிருப்பதைத் தொடர்ந்து 5 மில்லியன் ரூபாய் பெறும் முதல் நிலை வெற்றியாளர் யார் என்ற ஆர்வமும் பரபரப்பும் நிலவுகிறது.

இன்று இந்திய நேரப்படி மாலை 6.00 மணிக்குத் (மலேசிய நேரம் இரவு 8.30) தொடங்கிய நிகழ்ச்சியில் முதல் கட்டமாக கமல்ஹாசன் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்தார். அங்கு இறுதிச் சுற்றுக்குத் தேர்வாகியிருக்கும் நால்வரோடும் கலந்துரையாடினார். அந்த நால்வருக்கும் தனித்தனியாக தான் கைப்பட எழுதிய கவிதைகளை வாசித்து அதன் பின்னர் அவர்கள் ஒவ்வொருவருக்கும் தனித் தனியாகப் பரிசளித்தார்.

பின்னர் அந்த நால்வர் குறித்த குறும்படங்கள் காட்டப்பட்டன.

#TamilSchoolmychoice

இந்த ஆண்டுக்கான போட்டியில் பங்குபெற்றவர்கள் மேடைக்கு அழைக்கப்பட்டு வரிசையாக அமரவைக்கப்பட்டனர். யார் இந்த முறை வெல்வார்கள் என அவர்களிடமும் கமல் கருத்து கேட்டார். பெரும்பாலோர் மலேசியரான முகேன் அல்லது லோஸ்லியா வெற்றி பெறுவார்கள் என ஆரூடம் கூறினர்.

அதைத் தொடர்ந்து கடந்த ஆண்டு பிக்பாஸ் 2 வெற்றியாளரான ரித்திகா பிக்பாஸ் இல்லத்திற்குள் நுழைந்தார். கமல் வைத்திருந்த அட்டையில் ஷெரின் என எழுதியிருக்க கமல் அவரை வெளியே அழைத்து வருமாறு ரித்திகாவைக் கேட்டுக் கொண்டார்.

இதைத் தொடர்ந்து ஷெரின் மேடைக்கு அழைத்து வரப்பட்டார். எஞ்சியிருக்கும் மூவரில் யார் வெல்லக் கூடிய வாய்ப்பை அதிகம் கொண்டவர் எனக் கேட்கப்பட்டபோது முதலாவது சாண்டி, இரண்டாவது முகேன், மூன்றாவது லோஸ்லியா என ஷெரின் வரிசைப்படுத்தினார்.

இதனால் எஞ்சியிருக்கும் மூவரில் ஒருவர்தான் வெற்றியாளராகப் போகிறார் என்பது உறுதியாகியிருக்கிறது.

-செல்லியல் தொகுப்பு