Home One Line P2 ஹாங்காங்: முகமூடித் தடையால் புதிய ஆர்ப்பாட்டங்கள் வெடித்தன

ஹாங்காங்: முகமூடித் தடையால் புதிய ஆர்ப்பாட்டங்கள் வெடித்தன

764
0
SHARE
Ad

ஹாங்காங் : ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்பவர்கள் முகமூடிகளை அணிவதற்கு ஹாங்காங் அரசாங்கம் தடைவிதித்து அவசரநிலைப் பிரகடனத்தை அறிவித்ததைத்  தொடர்ந்து அந்நாட்டில் புதிய ஆர்ப்பாட்டங்கள் வெடித்தன.

இந்த சட்ட அமுலாக்கத்திற்கு ஐக்கிய நாடுகள் மன்றத்தின் பிரதிநிதிகளும் கண்டனம் தெரிவித்ததோடு, அதே வேளையில் வன்முறையில் ஈடுபடுபவர்கள் முகமூடி அணிந்து கொண்டு அத்தகைய செயல்களில் ஈடுபடுவதற்கும் கண்டனம் தெரிவித்தது.

ஹாங்காங்கின் பல எம்ஆர்டி இரயில் நிலையங்கள் சேதப்படுத்தப்பட்டன. அவற்றின் நுழைவாயில்களும் நுழைவுக்கட்டண முகப்பிடங்களும் அடித்து நொறுக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து இரயில் சேவைகள் அனைத்தும் இரத்து செய்யப்பட்டன.

#TamilSchoolmychoice

சீனா நாட்டின் வங்கிகளும் கடைகளும் ஆர்ப்பாட்டக்காரர்களால் குறிவைத்துத் தாக்கப்பட்டன.

சனிக்கிழமையன்று 161 எம்ஆர்டி நிலையங்களும் மூடப்பட்டிருந்தன. பல பேரங்காடிகளும், வங்கிக் கிளைகளும் மூடப்பட்டிருந்தன. திறக்கப்பட்டிருந்த பலசரக்குக் கடைகளிலும், வங்கிக் கிளைகளிலும் மக்கள் நீண்ட வரிசையில் நின்று பொருட்களை சேமித்து வைக்க வாங்கியதோடு, ரொக்கப்பணத்தையும் வங்கிகளிலிருந்து எடுப்பதைக் காண முடிந்தது.

ஆர்ப்பாட்டங்களின்போது 14 வயது சிறுவன் ஒருவன் சுடப்பட்டான் என்பதும் குறிப்பிடத்தக்கது.