Home One Line P2 ஹாங்காங் : “மிளகு” துப்பாக்கி ரவைகளால் கலைக்கப்பட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள்!

ஹாங்காங் : “மிளகு” துப்பாக்கி ரவைகளால் கலைக்கப்பட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள்!

680
0
SHARE
Ad

ஹாங்காங் : சீனா அரசாங்கத்தினால் அமுல்படுத்தப்பட்ட புதிய பாதுகாப்பு சட்டத்தைத் தொடர்ந்து அந்நாட்டின் உள்ளாட்சி தேர்தல்கள் ஒத்தி வைக்கப்பட்டிருக்கின்றன.

செப்டம்பர் 6-ஆம் தேதி நடைபெறவிருந்த இந்தத் தேர்தல்களை அடுத்த ஓராண்டுக்கு ஒத்திவைப்பதாக ஹாங்காங் நிருவாகத் தலைவர் கேரி லாம் அறிவித்தார். இனி இந்த தேர்தல் அடுத்தாண்டு ஜூலை மாதத்தில் தான் நடைபெறும்.

இந்த ஒத்திவைப்பை எதிர்த்து நேற்று ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 6) ஆம் தேதி ஹாங்காங்கில் வீதி ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன. ஆர்ப்பாட்டக்காரர்களைக் கலைக்க காவல்துறையினர் மிளகுத்தூள் பொருத்தப்பட்ட துப்பாக்கி ரவைகளைப் பயன்படுத்தி ஆர்ப்பாட்டக்காரர்களை நோக்கிச்  சுட்டனர்.

#TamilSchoolmychoice

மேலும் 300 ஆர்ப்பாட்டக்காரர்களும் கைது செய்யப்பட்டனர்.

இந்தத் தேர்தல் ஒத்தி வைப்புக்கு காரணம் கொவிட்-19 தொற்றுதான் காரணமே தவிர மற்ற அரசியல் காரணங்கள் எதுவும் இல்லை என ஹாங்காங் அரசாங்கம் அறிவித்துள்ளது.

இந்த ஒத்திவைப்பை எதிர்த்து நேற்று ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 6) ஆம் தேதி ஹாங்காங்கில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன. ஆர்ப்பாட்டக்காரர்களைக் கலைக்க காவல்துறையினர் மிளகுத்தூள் பொருத்தப்பட்ட துப்பாக்கி ரவைகளைப் பயன்படுத்தி ஆர்ப்பாட்டக்காரர்களை நோக்கிச்  சுட்டனர்.

இந்தத் தேர்தல் ஒத்தி வைப்புக்கு காரணம் கொவிட்-19 தொற்றுதான் காரணமே தவிர மற்ற அரசியல் காரணங்கள் எதுவும் இல்லை என ஹாங்காங் அரசாங்கம் அறிவித்துள்ளது.

ஹாங்காங் உள்ளாட்சித் தேர்தல்களில் போட்டியிட்டு பெரும்பான்மை இடங்களைக் கைப்பற்ற ஜனநாயகப்போராட்டவாதிகள் திட்டமிட்டிருந்தனர். அவர்களின் வியூகத்தை ஹாங்காங் அரசின் ஒத்தி வைப்பு முறியடித்துள்ளது.

உள்ளாட்சித் தேர்தல்களில் மொத்தமுள்ள இடங்களில் பாதி எண்ணிக்கையிலான இடங்களுக்கு மட்டுமே ஜனநாயக முறைப்படி தேர்தல் நடைபெறும்.

எஞ்சிய இடங்களுக்கான பிரதிநிதிகளை சீன அரசாங்கமே நியமிக்கும்.

கடந்த ஜூன் மாதத்தில் சீன அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட பாதுகாப்பு சட்டத்தைத் தொடர்ந்து ஹாங்காங்கில் நடைபெறும் முதல் ஜனநாயக ரீதியிலான தேர்தலாக உள்ளாட்சித் தேர்தல்கள் பார்க்கப்பட்டன.

இதில் பெரும்பான்மை இடங்களைக் கைப்பற்றுவதன் மூலம் புதிய பாதுகாப்புச் சட்டத்திற்கான மக்கள் எதிர்ப்பைக் காட்டும் களமாக இந்த உள்ளாட்சித் தேர்தல்களைப் பயன்படுத்த ஜனநாயகப் போராட்டவாதிகள் எண்ணம் கொண்டிருந்தனர்.