Home One Line P2 போராட்டக் காலங்களில் லாம் சிறப்பாக அரசை நிர்வகித்ததாக ஜின்பெங் புகழாரம்!

போராட்டக் காலங்களில் லாம் சிறப்பாக அரசை நிர்வகித்ததாக ஜின்பெங் புகழாரம்!

759
0
SHARE
Ad
படம்: நன்றி சின்ஜுவா செய்தி நிறுவனம்

ஷாங்காய்: போராட்டமிகு தருணத்தில் ஹாங்காங்கின் தலைமை நிருவாகி கேரி லாமின் தலைமையையும், கடின உழைப்பையும் சீன அதிபர் ஜி ஜின்பெங் பாராட்டினார். நேற்று திங்களன்று ஷாங்காயில் இரு தலைவர்களுக்கும் இடையிலான ஒரு சந்திப்புக் கூட்டத்தின் போது அவர் இந்த பாராட்டைத் தெரிவித்தார்.

சர்ச்சைக்குரிய சீனா ஒப்படைப்பு மசோதா தொடர்பாக, ஆசியநிதிமையமான ஹாங்காங்கில் கடந்த ஐந்து மாதங்களாக ஆர்ப்பாட்டங்கள் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.

வார இறுதியில் நடந்த சமீபத்திய வன்முறைகளின் போது எதிர்ப்பு தொடர்பான குற்றச்சாட்டில் மொத்தம் 325 பேர் கைது செய்யப்பட்டதாக ஹாங்காங் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

#TamilSchoolmychoice

போராட்டக்காரர்கள் முக்கிய சாலைகளை மூடியும், பொது போக்குவரத்தை தடுத்தும் எதிர்ப்புகளைத் தெரிவித்தனர்.  சில எதிர்ப்பாளர்கள் சின்ஹுவாவின் ஹாங்காங் தலைமையகத்தையும் தீயிட்டனர்.  ஆர்ப்பாட்டங்களை கையாள்வதில் பரவலான அதிருப்தி காரணமாக 2020-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் லாம் தனது பதவியிலிருந்து நீக்க திட்டமிட்டுள்ளதாக வந்த செய்திகளை சீன அரசாங்கம் கடந்த மாதம் நிராகரித்தது.

நேற்று நடந்த சந்திப்பில் லாம்,  ​​தனது கடமைகளை முழுமையாக நிறைவேற்றவும், நிலைமையை உறுதிப்படுத்தவும், சமூக சூழ்நிலையை மேம்படுத்தவும் பாடுபடுகிறார் என்று ஜின்பெங் கூறினார். மேலும் நிறைய கடின உழைப்புகளையும் அவர் செய்துள்ளதாக ஜின்பெங் கூறியதாக  ஜின்ஹுவாகுறிப்பிட்டுள்ளது.