Home உலகம் சீன அதிபருடன் அன்வார் இப்ராகிம் சந்திப்பு

சீன அதிபருடன் அன்வார் இப்ராகிம் சந்திப்பு

301
0
SHARE
Ad

பெய்ஜிங் : சீனாவுக்கு வருகை தந்திருக்கும் மலேசியப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் சீனப் பிரதமர் ஜீ ஜின் பெங்கைச் சந்தித்துப் பேச்சுவார்த்தைகள் நடத்தினார்.

சீன அதிபரின் வரவேற்புக்கும் நட்புக்கும் அன்வார் நன்றி தெரிவித்துக் கொண்டார். இலக்கவியல் தொழில்நுட்பம், ஆற்றல் உற்பத்தி, கல்வி ஆகிய துறைகளில் சீனாவுடனான ஒத்துழைப்பு மேலும் ஆழமாக வலிமை பெறும் என அன்வார் குறிப்பிட்டார்.

ஆசியான் கூட்டமைப்பின் தலைமைப் பொறுப்பை மலேசியா ஏற்கவிருக்கும் நிலையில் ஆசியானுக்கும் சீனாவுக்கும் இடையிலான உச்சநிலை மாநாட்டை முதன் முதலாக மலேசியா நடத்தவிருப்பதைச் சுட்டிக் காட்டிய அன்வார் அந்த மாநாட்டில் சீன அதிபரின் வருகை முக்கியத்துவம் பெறும் எனவும் குறிப்பிட்டார்.