Home நாடு சீன அதிபர் ஜீ ஜின் பெங்கை நேரில் வரவேற்றார் அன்வார் இப்ராகிம்!

சீன அதிபர் ஜீ ஜின் பெங்கை நேரில் வரவேற்றார் அன்வார் இப்ராகிம்!

68
0
SHARE
Ad

கோலாலம்பூர்: அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான வணிகப் போர் முற்றி வரும் நிலையில், அதனைத் திசை திருப்பும் விதமாக, 3 ஆசியான் நாடுகளுக்கு வருகை மேற்கொண்டுள்ளார் சீன அதிபர் ஜீ ஜின் பெங். முதல் கட்டமாக வியட்னாமுக்கு வருகையை முடித்துக் கொண்ட ஜின் பெங் இன்று செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 15) கோலாலம்பூர் வந்தடைந்தார்.

அவரை விமான நிலையத்தில் பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராகிம் நேரில் வரவேற்றார். ஜின் பெங்கிற்கு மலேசிய பாரம்பரியப்படி, இந்திய நடனங்களோடு வரவேற்பு நல்கப்பட்டது.

அடுத்த இரண்டு நாட்களுக்கு மலேசியப் பிரதமர் அரசாங்க அமைச்சரவை உறுப்பினர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தும் ஜின் பெங் வியாழக்கிழமை கோலாலம்பூரிலிருந்து புறப்பட்டு கம்போடியா சென்றடைவார்.

#TamilSchoolmychoice