Home One Line P2 பிக்பாஸ் 3 : மலேசியர் முகேன் வெற்றி பெற்றார்

பிக்பாஸ் 3 : மலேசியர் முகேன் வெற்றி பெற்றார்

1495
0
SHARE
Ad

சென்னை – (மலேசிய நேரம் திங்கட்கிழமை அதிகாலை 1.00 மணி) ஸ்டார் விஜய் தொலைக்காட்சியின் ‘பிக்பாஸ் 3’ தொடர் ஞாயிற்றுக்கிழமையோடு நிறைவு பெற்றது. 105 நாட்கள் இடைவிடாது தொடர்ந்து இந்த நிகழ்ச்சியின் இறுதியில் மலேசியரான முகேன் 5 மில்லியன் ரூபாய் பெறும் முதல் நிலை வெற்றியாளராகத் தேர்வு பெற்றார்.

இந்த முறை இறுதிச் சுற்றுக்கு வந்த 4 போட்டியாளர்கள் சாண்டி, ஷெரின், முகேன், லோஸ்லியா ஆகியோராவர்.

இவர்களில் முதலாவதாக ஷெரின் வெளியேற்றப்பட்டார். கடந்த ஆண்டு பிக்பாஸ் 2 வெற்றியாளரான ரித்திகா பிக்பாஸ் இல்லத்திற்குள் நுழைந்து கமல் காட்டிய அட்டையில் இருந்த பெயரின்படி ஷெரினை பிக் பாஸ் இல்லத்திலிருந்து வெளியே அழைத்து வந்தார்.

#TamilSchoolmychoice

இதற்கிடையில் பல்வேறு நிகழ்ச்சிகள் மேடையில் நடந்தேறின.

அவற்றைத் தொடர்ந்து நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக மேடையில் தோன்றிய சுருதி கமல்ஹாசன், பிக்பாஸ் இல்லத்திற்குள் சென்று லோஸ்லியாவை வெளியே அழைத்து வந்தார்.

இதைத் தொடர்ந்து சாண்டி, முகேன் இருவரில் ஒருவர்தான் வெற்றியாளர் என்பது தெளிவானது.

அவர்கள் இருவரையும் பிக்பாஸ் இல்லத்தின் விளக்குகளை அணைத்து விட்டு வெளியே வருமாறு கமல் பணித்தார். அவர்கள் இருவரிடமிருந்ரு பிக்பாசும் தனது கணீர்க் குரலில் விடைபெற்றுக் கொண்டார்.

சாண்டி, முகேன் இருவரும் பிக்பாஸ் இல்லத்திலிருந்து வெளியே வந்து மேடையில் கமலுடன் இணைந்து கொண்டனர். பின்னர் இரதம் போன்று வடிவமைக்கப்பட்ட வாகனத்தில் அவர்கள் மூவரும் மேடையிலேயே உலா வந்தனர்.

இறுதியில் வெற்றியாளர் மலேசியரான முகேன் என்பதை கமல் முகேன் கையைத் தூக்கி அறிவித்தார்.

-செல்லியல் தொகுப்பு