Home Featured நாடு நஜாடி கொலை வழக்கு: மறுவிசாரணை செய்ய உத்தரவு!

நஜாடி கொலை வழக்கு: மறுவிசாரணை செய்ய உத்தரவு!

835
0
SHARE
Ad

Hussain-Ahmad-Najadi-mati-ditembak-300x200கோலாலம்பூர் – அராப் வங்கி நிறுவனர் நஜாடி கொலை வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட டிரக் ஓட்டுநர்  கூங் சிவீ வானுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை விலக்கி வைத்த கூட்டரசு நீதிமன்றம், அவ்வழக்கை மறுவிசாரணை செய்ய உயர்நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டுள்ளது.

டான்ஸ்ரீ சுல்கிப்ளி அகமட் மாகினுடின் தலைமையிலான 5 பேர் கொண்ட நீதிபதிகள் குழு, இவ்வழக்கை உயர்நீதிமன்றம் மறுவிசாரணை செய்ய வேண்டும் என்ற கூங் சிவீ வானின் மேல்முறையீட்டை அனுமதித்ததோடு, மறுவிசாரணை செய்ய உயர்நீதிமன்றத்திற்கும் உத்தரவிட்டுள்ளது.