Home Featured உலகம் “தந்தை கொலையில் சந்தேகப்படும் நபரை விடுவித்தது ஏன்?” – பாஸ்கல் நஜாடி கேள்வி!

“தந்தை கொலையில் சந்தேகப்படும் நபரை விடுவித்தது ஏன்?” – பாஸ்கல் நஜாடி கேள்வி!

684
0
SHARE
Ad

Pascal Najadiமாஸ்கோ – தனது தந்தையைக் கொலை செய்யத் திட்டமிட்டதாக சந்தேகப்படும் நபரை எப்படி மலேசிய அதிகாரிகள் வெளியில் சுதந்திரமாக நடமாட விட்டுள்ளனர் ? என்று கொலை செய்யப்பட்ட அராப் வங்கி நிறுவனர் ஹுசைன் நஜாடியின் மகன் பாஸ்கல் நஜாடி கேள்வி எழுப்பியுள்ளார்.

“லிம் யூன் சூ என்ற அந்த நபருக்கு எதிராக எந்த வித ஆதாரமும் இல்லை என்றால், அவரை இண்டர்போலின் சிவப்புப் பட்டியலில் சேர்க்க இயலாது.”

“இண்டர்போலின் சிவப்புப் பட்டியலில் ஒருவரைச் சேர்க்க வேண்டும் என்றால், அதற்கு நிறைய வரைமுறைகள் உள்ளது” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

“அந்நபருக்கு எதிராக குற்றப்பத்திரிக்கையை நிரூபிக்க வேண்டும். அதன் பின்னரே ஒரு நாடு இண்டர்போலின் உதவியை நாட முடியும். குறைந்தது அந்த நபர் 1 வருட சிறைத் தண்டனை பெற்றிருக்க வேண்டும் மற்றும் சட்டப்பூர்வ விவகாரங்களை சம்பந்தப்பட்ட நாடு நிறைவு செய்திருக்க வேண்டும்” என்று மாஸ்கோவில் இருந்து நேற்று மலேசியாகினிக்கு அளித்த பேட்டியில் பாஸ்கல் தெரிவித்துள்ளார்.

அதேவேளையில், இண்டர்போலும் அவ்வளவு எளிதில் விசாரணையின்றி ஒருவரை தனது சிவப்புப் பட்டியலில் சேர்த்துவிடாது என்று குறிப்பிட்டுள்ள பாஸ்கல், சரவாக் ரிப்போர்ட் நிர்வாக ஆசிரியர் கிளேர் பிரவுன் விவகாரத்தில், அரசாங்கத்தின் கோரிக்கையை இண்டர்போல் நிராகரித்ததைச் சுட்டிக்காட்டியுள்ளார்.

கடந்த நவம்பர் 2-ம் தேதி, கோலாலம்பூர் குற்றவியல் விசாரணைத்துறைத் தலைவர் சைனுடின் அகமட் தெரிவித்த தகவலின் படி, லிம்மின் பெயர் இரண்டு ஆண்டுகளுக்கு இண்டர்போல் பட்டியலில் சேர்க்கப்பட்டுவிட்டதாகவும், ஆனால் பின்னர் அவர் விடுவிக்கப்பட்டதாகவும் பாஸ்கல் சுட்டிக்காட்டியுள்ளார்.

லிம் விடுவிக்கப்பட்டதற்கான காரணம் அவருக்கு எதிராகப் போதுமான ஆதாரங்கள் இல்லை என்று சைனுடின் குறிப்பிட்டதாகவும் பாஸ்கல் தெரிவித்துள்ளார்.