ஆப் ஸ்டோர் மற்றும் கூகுள் ஸ்டோரில் இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளக் கூடிய இந்த இந்த செயலிகள், பயனர்களின் நிதி சார்ந்த பயன்பாடுகளுக்கு பெரிதும் உதவும் என்று பேங்க் நெகாரா தெரிவித்துள்ளது.
‘மைபிஎன்எம்’ (MyBNM), ‘பிஎன்எம் மைலிங்க்’ (BNM MyLINK) மற்றும் ‘மைதபுங்’ (MyTabung) என்ற அந்த மூன்று செயலிகளின் பயன்பாடுகளும் தனித்தன்மை வாய்ந்தவை என்று கூறப்படுகிறது.
நிதி சார்ந்த அண்மைச் செய்திகளுக்கு மைபிஎன்எம் செயலியும், பேங்க் நெகாராவின் புதிய நாணய மற்றும் நிதி கொள்கைகள் குறித்து அறிந்து கொள்வதற்கும், நிதிச் சேவை வழங்குபவர்களுடன் பயனர்கள் நேரடியாக தொடர்பு கொள்வதற்கும் பிஎன்எம் மைலிங்க் செயலியும், பயனர்களின் வருவாய், அவர்களின் செலவீனங்கள், சேமிப்புகள் போன்றவற்றை தொடர்ச்சியாக கண்காணிக்க மைதபுங் செயலியும் பயன்படும் என்று தெரிய வருகிறது.