Home One Line P1 1எம்டிபி: தேசிய வங்கி, பிற வங்கிகளையும் விசாரிக்க வேண்டும்

1எம்டிபி: தேசிய வங்கி, பிற வங்கிகளையும் விசாரிக்க வேண்டும்

593
0
SHARE
Ad

கோலாலம்பூர்: 1எம்டிபி பணத்தின் வரத்து, வெளிச்செல்லும் நடவடிக்கையில் சம்பந்தப்பட்டுள்ள தேசிய வங்கி, நாட்டின் பிற வங்கிகளை விசாரித்து ஆதாரங்கள் இருந்தால் நீதிமன்றத்தில் நிறுத்துமாறு தேசிய ஊடகவியலாளராக அப்துல் காடிர் பரிந்துரைத்தார்.

நேற்று சுவிஸ் தேசிய வங்கி அதிகாரி ஒருவர், நாட்டின் முதலீட்டு நிறுவனத்திடமிருந்து மோசடி செய்யப்பட்ட மில்லியன் கணக்கான டாலர்களை பெறுவதில் உள்ள சிக்கல் குறித்து எச்சரிக்கத் தவறிய குற்றவாளி எனக் கண்டறியப்பட்டார்.

“அந்த அடிப்படையில், 1எம்டிபி பணத்தைப் பெறுவது, வெளியேற்றத்தில் ஈடுபட்ட மலேசிய வங்கிகள் விசாரிக்கப்படுவது பொருத்தமானது. ஆதாரங்கள் இருந்தால் நீதிமன்றத்திற்கு கொண்டு வரப்படுவது சரியானது.

#TamilSchoolmychoice

“அம்பேங்கிற்கு அபராதம் மட்டும் போதாது. இந்த விஷயத்தில் தேசிய வங்கியின் பங்கு கூட ஆராயப்பட வேண்டும், ” என்று அவர் முகநூலில் தெரிவித்துள்ளார்.

“ஜோ லோ மலாய்க்காரர்களை நன்றாகப் புரிந்து கொண்டார். அதனால்தான் அவர் இந்த 1எம்டிபி மோசடி திட்டத்திற்கு வெள்ளையர்களையும், அரேபியர்களையும் பயன்படுத்தினார்.

“வெள்ளையர்கள், அரேபியர்கள் பற்றி பேசினால் மலாய்க்காரர்கள் மயங்கி விடுவார்கள் என்று அவர் அறிவார்,” என்று காடிர் கூறினார்.